LOADING...
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தால் 2,300 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்; நிஃப்டி 25,750-ஐத் தாண்டியது
இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தால் 2,300 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்; நிஃப்டி 25,750-ஐத் தாண்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. காலை 9:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,340 புள்ளிகள் (2.89%) உயர்ந்து 84,021 என்ற நிலையை எட்டியது. நிஃப்டி 50, 701 புள்ளிகள் (2.83%) உயர்ந்து 25,789 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

காரணம்

உயர்வுக்கு காரணம்

அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாகக் குறைத்துள்ளதும், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் வரியை நீக்கியதும் சந்தைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இது பல மாதங்களாக சந்தையை வாட்டி வந்த நிச்சயமற்ற தன்மையை நீக்கியுள்ளது.

பங்குகள்

உயர்வை சந்தித்த முக்கியத் துறைகள் மற்றும் பங்குகள்

ஏற்றுமதி பங்குகள்: ஜவுளி, ஆட்டோ பாகங்கள் மற்றும் மென்பொருள் (IT) நிறுவனங்களின் பங்குகள் பெரும் உயர்வைச் சந்தித்தன. பாரத் ஃபோர்ஜ் (Bharat Forge), டாடா கெமிக்கல்ஸ் மற்றும் ஜவுளித் துறை பங்குகள் கவனிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. நிதி மற்றும் வங்கி: முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் காளைகளின் பிடியில் இருந்தன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2027 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் 16-18 சதவீதம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement