இளைஞர்களே அலெர்ட்! 45% அதிக சம்பளத்துடன் மின்சார வாகனத் துறையில் குவியப்போகும் 4 கோடி புதிய வேலைவாய்ப்புகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன துறை வெறும் வாகனப் பயன்பாட்டுடன் நின்றுவிடாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் புதிய மையமாக மாறி வருகிறது. சர்வதேச மனிதவள நிறுவனமான அடெக்கோ இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய எலக்ட்ரிக் வாகனத் துறை 3 கோடி முதல் 4 கோடி வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்கும்.
புதிய துறைகள்
90% மறைமுக வேலைவாய்ப்புகளும் புதிய துறைகளும்
இந்த ஆய்வறிக்கையின்படி, உருவாக்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே தொழிற்சாலைகளின் நேரடி வேலைகளாக இருக்கும்.
எஞ்சியுள்ள 85 முதல் 90 சதவீத வேலைவாய்ப்புகள் மறைமுக வேலைவாய்ப்புகளாகவே அமையும்.
சார்ஜிங் மையங்கள் அமைத்தல், பேட்டரி பராமரிப்பு, வாகன சேவை, டெலிமேடிக்ஸ், சாப்ட்வேர் உருவாக்கம், டிரைவர் பயிற்சி மற்றும் பேட்டரி மறுசுழற்சி போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்தப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
உற்பகுதி வளர்ச்சி
உற்பத்தியும் மாற்று நகரங்களின் வளர்ச்சியும்
எலக்ட்ரிக் வாகனத் துறையில் உற்பத்தி சார்ந்த பிரிவுகள் 50 முதல் 55 சதவீத வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கும்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள பாரம்பரிய வாகன உற்பத்தி மையங்களைத் தாண்டி, ஓசூர், சானந்த் மற்றும் தோலேரா போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தொழில் மண்டலங்களில் சுமார் 70 சதவீத புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திறன் தேவை
45% கூடுதல் சம்பளமும் திறன் தேவைகளும்
பாரம்பரிய பெட்ரோல், டீசல் வாகன துறையினரைக் காட்டிலும், எலக்ட்ரிக் வாகனத் துறையில் சிறப்பறிவு பெற்ற ஊழியர்களுக்கு 45 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
பேட்டரி மேனேஜ்மென்ட், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாப்ட்வேர் போன்ற துறைகளில் திறமையான நபர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இக்கணிப்பு வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் 40-50% வேலைகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றாலும், பின்னர் அவை நிரந்தர வேலைகளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.