உத்தரப்பிரதேசம்: செய்தி
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன்' காற்று தூய்மைத் தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
ரஷ்யாவில் காவலில் வைக்கப்பட்ட கான்பூர் பொறியாளர்: ராணுவத்தில் சேர வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா மாஸ்கோவில் காவல் துறையினரால் சட்டவிரோதமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி சினேகா குப்தா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.
100% இந்திய தயாரிப்பு: ஏகே-203 'ஷேர்' துப்பாக்கி சோதனை வெற்றி
பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் இந்தியா ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ஜந்தர் மந்தரில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ ஆதரவு பயங்கரவாதக் குழு திட்டமிட்டது: பஞ்சாப் காவல்துறை
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த இரண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதக் குழுக்களை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது.
புத்தரின் முதல் போதனை இடம்; யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத்; இந்தியாவிற்கு 45வது அங்கீகாரம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த கலாச்சாரத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்
வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அமெரிக்கர்; பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லை பகுதியான சோனாலி அருகே, முறையான பயண ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற 36 வயது அமெரிக்கக் குடிமகன் ஒருவரை SSB பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மன்மோகன் சிங் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்: முன்னாள் தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எழுதியுள்ள "இந்தியா அண்ட் ஐ: எ ஹண்ட்ரட் மெமரீஸ், நாட் அ மெமோயர்" என்ற புதிய புத்தகத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற உருக்கமான சந்திப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பரிதாப பலி
உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
'நௌதபா': இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய வெப்பமான நாட்கள்; வெப்பநிலை 48°C வரை உயரக்கூடும்
மே 25 அன்று தொடங்கி ஜூன் 2 அன்று முடிவடையவுள்ள ஒன்பது நாள் பருவமழைக்கு முந்தைய காலமான நௌதபாவின் வருகையுடன், இந்தியா தற்போது தனது மிகவும் வெப்பமான பருவமழைக்கு முந்தைய காலத்தை அனுபவித்து வருகிறது.
ஐடிஐ முடித்துவிட்டு இயற்கை விவசாயம்: 23 நாட்களில் 1.5 லட்சம் ஈட்டிய இளைஞர் சாதனை
உத்தரபிரதேசம் மாவ் பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் மவுரியா என்ற ஐடிஐ பட்டதாரி இளைஞர், வழக்கமான வேலைக்குச் செல்லாமல் தனது கிராமத்திற்கே திரும்பி விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.
உலகிலேயே மிக அதிக வெயில் பதிவான 50 நகரங்களும் இந்தியாவில்தான்! ஒரே மாநிலத்தில் மட்டும் 32 நகரங்கள் ஏன்?
சர்வதேச வானிலை மற்றும் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான AQI.in வெளியிட்ட தற்போதைய உலகளாவிய வெப்பப் பட்டியல் ஒட்டுமொத்த தேசத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிக வெப்பமான நகரங்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்; மின்சார தேவை புதிய உச்சம்
இந்தியா முழுவதும் கோடைகால வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
23 வயதில் பத்மஸ்ரீ வென்று புதிய சரித்திரம் படைத்த பாரா தடகள சாம்பியன் பிரவீன் குமார்
இந்தியப் பாரா தடகள உலகின் அசாத்திய நாயகனும், பாராலிம்பிக் தங்கம் வென்ற சாம்பியனுமான 23 வயது இளம் வீரர் பிரவீன் குமாருக்கு விளையாட்டுத் துறையில் செய்த சாதனைக்காக மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), இந்த வாரம் இந்தியா முழுவதும் நிலவும் வெப்ப அலை குறித்து சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெய்த கடுமையான மழையால் பலி எண்ணிக்கை 111-ஐ எட்டியது
இந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 111 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் முழுவதும் புயல், இடியுடன் பெய்த கனமழை காரணமாக 89 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கனமழையால் குறைந்தது 89 பேர் உயிரிழந்தனர்.
மக்களவை இருக்கை அமைப்பில் மாற்றம் கோரிய திமுக: அறிக்கை
மக்களவையில் தனது உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யுமாறு திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கோரிக்கை விடுத்துள்ளது.
2017-ஆம் ஆண்டு முதல் புனேவில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 622-ஆக உயர்ந்துள்ளது
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர்.
தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்
இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
வன்முறைக்கு பணிந்த UP அரசு; நொய்டா தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு நள்ளிரவில் அதிரடியான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது.
10 மணி நேர 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் இருந்து பெற்றோரை மீட்ட 8ஆம் வகுப்பு மாணவன்; சாமர்த்திய சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் பிரேம் நகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சஞ்சய் சக்சேனா மற்றும் அவரது மனைவிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.
டெல்லியில் பரபரப்பு: சட்டமன்ற இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு புகுந்த மர்ம கார்
டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் திங்கள்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் தனது காரால் இரும்பு நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த சம்பவம், தலைநகரில் பெரும் பாதுகாப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் அதிக மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் உள்ளது
IQAir வெளியிட்ட சமீபத்திய உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லோனி, 2025-ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த மூளைச்சாவு அடைந்த அதிசய பெண்மணி
இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளை பார்ப்பது சாதாரண விஷயம் தான். பெரிய பள்ளங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த கதைகளைத் தான் கேட்டிருப்போம். ஆனால் பெரும் பள்ளத்தினால் ஒருவர் உயிர் பிழைத்த கதை இது.
லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் சகோதரிகளின் தற்கொலைகளுடன் தொடர்பு படுத்தப்படும் கொரிய 'லவ் கேம்' என்ன?
காசியாபாத்தில் உள்ள மூன்று மைனர் சகோதரிகள் தங்கள் ஒன்பதாவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து இறந்ததாக கூறப்படுகிறது.
மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் 'பாரத் சிட்டி' குடியிருப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.
13 ஆண்டுகாலக் கண்ணீர் போராட்டம்! ஹரிஷ் ராணாவுக்கு கண்ணியமான மரணம் கிடைக்குமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (32), கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது தங்கும் விடுதியின் 4 வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
டெம்போ டிரைவர் டூ விமான நிறுவன உரிமையாளர்: உ.பி இளைஞரின் அசாத்திய சாதனை
7 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூர் வீதிகளில் டெம்போ ஓட்டிய ஒரு இளைஞர், இன்று தனது சொந்த விமான நிறுவனத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
வளர்ப்பு நாய் உயிருக்குப் போராட்டம்: லக்னோவில் இரு சகோதரிகள் தற்கொலை - உருக்கமான கடைசி ஆசை!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தங்களது வளர்ப்பு நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரண்டு இளம் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச இருமல் மருந்து வழக்கு: அமலாக்கத்துறை 3 மாநிலங்களில் 25 இடங்களில் அதிரடிச் சோதனை; முக்கியக் குற்றவாளி துபாயில் பதுங்கல்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கோடீன் அடிப்படையிலான இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மூன்று மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.