
ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் ஆசையில் சென்று ரூ.8 லட்சம் இழந்த 57 வயது டாக்டர்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 57 வயது மருத்துவர், டேட்டிங் செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங்கைத் தொடர்ந்து நடந்த மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ரூ.8 லட்சத்தை இழந்தார். ஜூலை 20 ஆம் தேதி, மருத்துவர் ஆன்லைனில் தொடர்பு கொண்டிருந்த விகாஸ் என்ற நபரைச் சந்திப்பதற்காக உள்ளூர் ஹோட்டலில் அறை எடுத்து காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. போலீஸ் அறிக்கைகளின்படி, விகாஸ் இரவு 10 மணியளவில் பீருடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக குடித்த பிறகு, மருத்துவர் ஆடைகளை அவிழ்த்து குற்றம் சாட்டப்பட்டரிடமும் அதுபோல செய்யச் சொல்லியுள்ளார். இருப்பினும், விகாஸ் அதற்கு பதிலாக மருத்துவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி அவரை மிரட்டினார்.
தகராறு
இருவருக்கும் இடையே தகராறு
"இந்த வயதில் இதுபோன்ற செயல்கள் உங்களுக்குப் பொருந்தாது. நீங்கள் ஷிவ் நக்ரியில் இருக்கிறீர்கள், இதையெல்லாம் செய்யாதீர்கள்" என்று அவர் மருத்துவரின் வயதையும் வாழ்க்கை முறையையும் விமர்சித்தார். மேலும், அவரின் நிர்வாண காட்சிகளை வெளியிடாமல் இருப்பதற்காக விகாஸ் பணம் கோரியுள்ளார். அழுத்தத்தின் பேரில், மருத்துவர் யுபிஐ வழியாக குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.8 லட்சத்தை மாற்றியுள்ளார். இதையடுத்து மறுநாள், மருத்துவர் விகாஸ் மீது வழக்கு பதிவு செய்தார். உத்தரபிரதேச காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.