Loading...

விமானம்: செய்தி

08 Oct 2026
• பீகார்

பாட்னா - லக்னோ இண்டிகோ விமானத்தில் மின்னல் தாக்கி முன் பகுதி சேதம்: 110 பயணிகள் பத்திரமாக தரை இறக்கம்

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் (6E925), நடுவானில் இடி மின்னல் மற்றும் மோசமான வானிலையில் சிக்கி லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

07 Oct 2026
• ஈரான்

ஈரான் போரில் 81 போர் விமானங்களை இழந்த அமெரிக்க ராணுவம்: ரூ.27,500 கோடி இழப்பு என ஆராய்ச்சி அறிக்கை

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கியது முதல் அமெரிக்க ராணுவம் இதுவரை 81 போர் விமானங்களை இழந்துள்ளதாகவும் அல்லது சேதமடைந்துள்ளதாகவும் அமெரிக்க காங்கிரஷனல் ஆராய்ச்சி சேவையின் (CRS) புதிய அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

06 Oct 2026
• துபாய்

காசா தாக்குதலுக்கு பழிவாங்கவே விமானத்தை மோத முயன்றேன்: ஃபிளைதுபாய் துணை விமானியின் வாக்குமூலம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, காசா விவகாரத்திற்கு பழிவாங்கும் நோக்கிலேயே தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

06 Oct 2026
• துபாய்

மண்டை ஓடு உடைந்து, ரத்தம் சிந்திய நிலையிலும் 170 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி என்பவர் விமானத்தை கடத்தி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06 Oct 2026
• எரிபொருள்

விமான எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசிடம் இந்திய விமான நிறுவனங்கள் அவசர கோரிக்கை

மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நிதியுதவி மற்றும் வரி விலக்குகளைத் தொடர கோரி இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு(FIA) மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.

06 Oct 2026
• துபாய்

டெல் அவிவ் நகரை நோக்கி பாய்ந்த ஃபிளைதுபாய் விமானம்; சுட்டு வீழ்த்தத் தயரான இஸ்ரேல் போர் விமானங்கள்

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃபிளைதுபாய் FZ1073 விமானத்தில், உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என்பவர் விமான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தி விமானத்தைக் கடத்த முயன்ற சம்பவத்தின் பின்னணியில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

05 Oct 2026
• லண்டன்

நடுவானில் திடீர் ஆபத்து! 28,000 அடிகள் கீழே இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; லண்டனுக்கு அவசரமாகத் திருப்பப்பட்டது

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 விமானம் நடுவானில் திடீரென அவசரநிலையை அறிவித்தது.

05 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேலில் விமானத்தை மோதி அழிக்க திட்டமிட்ட ஃபிளைதுபாய் உதவி விமானிக்கு மரண தண்டனை?

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க திட்டமிட்ட ஃபிளைதுபாய் நிறுவனத்தின் உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

05 Oct 2026
• இண்டிகோ

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி! கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ; அக்டோபர் 6 முதல் புதிய விதிகள்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

05 Oct 2026
• துபாய்

9/11 பாணி தாக்குதல்: பிளைதுபாய் விமானத்தை டெல் அவீவ் கட்டடத்தின் மீது மோதுவதுதான் ஓமானி விமானியின் திட்டமாம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்திற்குச் சென்ற பிளைதுபாய் விமானத்தை கடத்தி, டெல் அவீவில் உள்ள வானளாவிய கட்டடத்தில் மோதி பயங்கரவாத தாக்குதல் நடத்த ஓமானி இணை விமானி சதித் திட்டம் தீட்டியிருந்தது இத்தாலிய ஊடகமான 'Corriere Della Sera' செய்தி வெளியிட்டுள்ளது.

05 Oct 2026
• சென்னை

விமானத் தகுதி சான்றிதழுக்கு லஞ்சம்: சென்னையில் CBI சோதனையில் பிடிபட்ட DGCA அதிகாரி

விமானங்களின் தகுதிச் சான்றிதழ்(Airworthiness Certificate) வழங்குவதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சென்னையில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின்(DGCA) துணை இயக்குநர் மற்றும் தனியார் விமான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்துள்ளது.

04 Oct 2026
• ஓமான்

'எனக்குச் சாவ பயம் இல்லை!' கேப்டனை வெட்டிய ஃப்ளைதுபாய் துணை விமானி அளித்த பகீர் வாக்குமூலம்

ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவரைக் காக்பிட்டில் இருந்த கோடரியால் கொடூரமாகத் தாக்கிய துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, சவுதி அரேபிய அதிகாரிகளிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியாவின் பெருமை! பிளைதுபாய் பைலட் ஸ்மித் மச்சாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி; மேன்கைண்ட் பார்மா அறிவிப்பு

துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தைக் கடத்தி பேரழிவை ஏற்படுத்த முயன்ற சதியை முறியடித்த இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரத்தைப் பாராட்டி, முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான மேன்கைண்ட் பார்மா ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

பிளைதுபாய் சதி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை; மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமா?

பிளைதுபாய் விமானத்தைத் தகர்க்க முயன்ற சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது மிகக் கடுமையான விலை செலுத்த நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

03 Oct 2026
• ஓமான்

ஏற்கனவே தடை செய்யப்பட்டவர்! பிளைதுபாய் இந்திய பைலட்டைத் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி யார்?

பிளைதுபாய் FZ1073 விமான காக்பிட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி பற்றிய முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளைதுபாய் சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தின் காக்பிட்டில் வைத்து, அதை விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்துள்ளது.

'எனக்கு நம்பிக்கை தந்த ஹனுமான் சாலிசா!' பிரதமர் மோடியுடன் பேசிய இந்திய பைலட் ஸ்மித் மச்சார் நெகிழ்ச்சி

பிளைதுபாய் FZ1073 விமானத்தின் காக்பிட்டில் சக ஓமன் நாட்டு விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், காக்பிட் பூட்டைத் திறந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக பேசி நலம் விசாரித்தார்.

பிளைதுபாய் விமான விபத்து சதி: ஈரானுக்குத் தொடர்பா? டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தை காக்பிட்டில் வைத்து ஓமன் நாட்டை சேர்ந்த சக விமானி கீழே சாய்த்து விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

01 Oct 2026
• இஸ்ரேல்

'நாடு உங்களுக்கு தலைவணங்குகிறது!' பென் குரியன் விமான நிலைய ஓய்வறைக்கு இந்திய விமானி பெயர்; இஸ்ரேலிய எம்பி முன்மொழிவு

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில், இணை விமானி நடத்திய தீவிரவாதத் தாக்குதலையும் மீறி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாடு தனது மிக உயரிய மரியாதையை செலுத்த தயாராகி வருகிறது .

வானில் ஆபத்து வந்தால் யார் காப்பாற்றுவார்? வைரலாகும் பிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாரின் பழைய பேட்டி

துபாயிலிருந்து தெல் அவீவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில், இணை விமானியின் கொடூர கத்திக்குத்துத் தாக்குதலையும் மீறி, சாதுரியமாக செயல்பட்டு 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார் உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்தியாவின் நிஜ ஹீரோ! துபாய் விமானத்தில் உயிரைப் பணயம் வைத்து 170 பேரைக் காப்பாற்றிய கேப்டன்; பிரதமர் மோடி பெருமிதம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பிளைதுபாய் (FZ1073) விமானத்தில், கொடூர தாக்குதலுக்கு உள்ளான போதிலும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைப் பாதுகாத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

30 Sep 2026
• துபாய்

விமானத்தைக் கவிழ்க்க முயன்ற ஓமன் விமானி! உயிருக்குப் போராடியபடி சண்டை போட்ட இந்திய கேப்டன்

துபாயிலிருந்து டெல் அவீவ் சென்ற பிளைதுபாய் (flydubai) FZ1073 விமானத்தில் 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காத்து, பேரழிவைத் தடுத்த முதன்மை விமானி ஒரு இந்தியர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

30 Sep 2026
• துபாய்

நடுவானில் விமானத்தைக் கவிழ்க்க சதியா? விமானத்தை கடத்த முயற்சியா? பிளைதுபாய் விமானத்தில் நடந்தது என்ன?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தில், நடுவானில் விமானத்தை கவிழ்க்க முயன்ற சம்பவமும், கத்திக்குத்துத் தாக்குதலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 Sep 2026
• துபாய்

நடுவானில் விமானிகள் இடையே பயங்கர சண்டை: 'ஹைஜாக்' சிக்னலால் பதறிய இஸ்ரேல், சவுதியில் அவசர அவசரமாக தரையிறக்கம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு பறந்து கொண்டிருந்த பிளைதுபாய் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம், நடுவானில் திடீரென அவசரநிலையை பிரகடனப்படுத்தி, சவுதி அரேபிய வான்வெளியில் பாதையை மாற்றித் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு சென்ற FZ1073 விமானத்தில், அதன் இரு விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நடுவானில் 'ஹைஜாக்' (விமானக் கடத்தல்) சிக்னல் அழுத்தப்பட்டு, இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் தடைக்கு மாற்று வழி: சீனா வழியாக விமானங்களை இயக்க இந்தியா புதிய திட்டம்

பாகிஸ்தான் வான்பாதை மூடப்பட்டுள்ளதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் நேர விரயம் மற்றும் பெரும் எரிபொருள் செலவைக் குறைக்க, சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேலே மாற்று வான்வழிப் பாதையை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

28 Sep 2026
• போயிங்

லேண்டிங் நேரத்தில் ஆட்டோபைலட் ஆஃப்! போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு; இந்தியாவில் 96 விமானங்கள் பாதிப்பு

உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 மேக்ஸ் ரக விமானங்களின் தானியங்கி வழிசெலுத்தல் அமைப்பில் மென்பொருள் கோளாறு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.

சூரிச் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி சஸ்பெண்ட்: மது அருந்திவிட்டு விமானம் இயக்க முயன்றதால் நடவடிக்கை

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படவிருந்த ஏர் இந்தியா (AI 151) விமானத்தின் தலைமை விமானி, மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

22 Sep 2026
• ஈரான்

ஈரான் விமானங்களுக்கு சர்வதேச தடை: அமெரிக்காவின் கெடுவால் உலகம் முழுவதும் இயக்கம் முடங்கும் அபாயம்

ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் சேவைகளையும் உலகம் முழுவதும் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

21 Sep 2026
• ஜப்பான்

ஜப்பான் அருகே 'டுஜுவான்' புயல்: 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற எச்சரிக்கை

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை நோக்கி 'டுஜுவான்' புயல் அதிவேகமாக நகர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15 Sep 2026
• டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் பெரும் பாதுகாப்பு விதிமீறல்: குடிவரவு சோதனையின்றி ஜெர்மனி சென்ற 3 வெளிநாட்டவர்கள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

14 Sep 2026
• ஈரான்

ஈரானில் பாராசூட் இன்றி விழுந்த அமெரிக்க அதிகாரி மீண்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்

ஈரான் வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15ஈ (F-15E) போர் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதில், எதிரி நாட்டின் மலைப்பகுதியில் பாராசூட் சேதமடைந்து விழுந்த அமெரிக்க விமானப் படை அதிகாரி, 50 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி பின்னணியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

11 Sep 2026
• டெல்லி

டெல்லி வந்த புதினின் 'ஆரஸ் செனாட்' கார்: வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள்

டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 'பறக்கும் கிரெம்ளின்' என அழைக்கப்படும் தனது சிறப்பு தனி விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.

10 Sep 2026
• பிரிக்ஸ்

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள்: BRICS உச்சி மாநாட்டிற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக 3 ரஷ்ய ராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளன.

10 Sep 2026
• தமிழகம்

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்: முதல்வர் விஜய் இன்று வெளிநாடு பயணம்

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தனது முதலாவது அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார்.

09 Sep 2026
• பிரிட்டன்

பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு: 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பிரிட்டனின் தேசிய வான்வழிப் போக்குவரத்து சேவை அமைப்பான NATS அமைப்பின் விமானத் தரவு செயலாக்க கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரிட்டன் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

07 Sep 2026
• அமெரிக்கா

ஓடுதளத்தை விட்டு வெளியேறி வாகனங்கள் மீது மோதிய அமேசான் விமானம்; 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு

தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்

இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலப் பயண நெரிசலை எதிர்கொள்ள தனது சேவையை அதிரடியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ குரூப் கேப்டன் அபினந்தன் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்

பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி புகழ் பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், கோவாவை தளமாக கொண்டு இயங்கும் 'FLY91' என்ற தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.

கலாநிதி மாறனுக்கு ₹50 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கோரும் ஸ்பைஸ்ஜெட்

பண நெருக்கடியில் சிக்கியுள்ள குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது முதல் தவணையான ₹50 கோடியை செலுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

29 Aug 2026
• இயற்கை

அலாஸ்காவில் ராஃப்டிங்: கண்டறியப்பட காத்திருக்கும் மறைந்திருக்கும் ஆறுகள்

அலாஸ்காவின் தொலைதூர ஆறுகள், புதுமையான ராஃப்டிங் அனுபவத்தைத் தேடும் சாகச விரும்பிகளுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.

28 Aug 2026
• கூகுள்

சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் செய்தி! கூகுள் தேடலில் குறைந்த விலையில் பிளைட் டிக்கெட் புக் செய்ய புதிய ஏஐ வசதி

சுற்றுலா மற்றும் பயணங்களை எளிதாகத் திட்டமிடும் வகையில், கூகுள் தனது ஏஐ மோட் தேடலில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Aug 2026
• நேபாளம்

8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை: வளிமண்டலத்தின் மேல் அடுக்கிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் விழுந்தும் சேதமடையாத ஸ்மார்ட்போன்

வளிமண்டலத்தின் மேல் அடுக்கிலிருந்து விழுந்தும் சேதமடையாமல் தப்பிய ஒரு ஸ்மார்ட்போன், புதிய கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மடிக்கணினி தீப்பிடித்ததில் பயணிகள் காயமடைந்தனர்

அட்லாண்டாவிலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, நடுவானில் பயணி ஒருவரின் மடிக்கணினி தீப்பிடித்ததால், பயணத்தின்போதே அவசரநிலையாக மாறியது.

சர்வதேச விமான பயணிகளுக்கு செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸ் சீல் இல்லை: மத்திய அரசு

இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு குடிவரவுத் துறை சார்பில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்படவுள்ளது.

17 Aug 2026
• உக்ரைன்

லட்சுமி மிட்டலின் உக்ரைன் எஃகு ஆலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் நாசம்

உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் உள்ள, இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் லக்ஷ்மி மிட்டலுக்கு சொந்தமான ஆர்செலர் மிட்டல் சுரங்க மற்றும் உலோகவியல் வளாகம், ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்லலாமா? வாரணாசி விமான நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவமும் மத்திய அரசின் கடும் விதிகளும்

வாரணாசியில் இருந்து மும்பை நோக்கி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணியின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாகத் தோட்டா பாய்ந்து இரு பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர்.

ஏர் இந்தியா விமான விபத்து: விமானத்தில் ஹைட்ராலிக் அழுத்தம் குறைந்ததாக ஏர்பஸ் நிறுவனம் அறிக்கை

ஆகஸ்ட் 4 அன்று, தாய்லாந்து பூக்கெட்டிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஏற்பட்ட ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, விமானம் திடீரென 300 அடி உயரத்திற்குக் கீழே இறங்கியது.

அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை: ஏர் இந்தியா அதிரடி

சமீபத்தில் தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, தனது அனைத்து விமானிகளுக்கும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மருந்துகள் பயன்பாட்டிற்கான கட்டாயப் பரிசோதனையை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா பூக்கெட்-டெல்லி விமானம் 2 நிமிடங்களில் 11 எச்சரிக்கை சமிக்ஞைகளைப் பதிவு செய்ததாம்

ஆகஸ்ட் 4 அன்று, பூக்கெட்டிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, தனது பயணத்தின்போது சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென கீழே சரிந்தது.