LOADING...
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
02:41 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வான்பரப்பு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு

மீட்பு நடவடிக்கைகள்

செவ்வாய்க்கிழமை காலை, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் துபாயிலிருந்து சிறப்பு நிவாரண விமானங்களை இயக்கி, அங்கு தவித்து கொண்டிருந்த இந்திய பயணிகளை தாயகம் அழைத்து வந்தன. மேலும், ஜித்தாவில் சிக்கியுள்ள பயணிகளுக்காக மார்ச் 3-ஆம் தேதி 10 சிறப்பு மீட்பு விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக, நீண்ட தூர சர்வதேச விமானங்கள் மாற்றுப் பாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன. இதற்காக கூடுதல் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானச் சேவைகளைச் சீரமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அறிவுறுத்தல்

பயணிகளுக்கு அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படும் முன், தங்களின் Flight Status குறித்து அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பயணச்சீட்டு ரத்து மற்றும் மறுபதிவு தொடர்பான விதிமுறைகளை வெளிப்படையாகப் பின்பற்ற விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு துறையுடன் இணைந்து, பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement