Loading...
"மெடலை பார்த்ததும் தம்பி பண்ணிய வேலை..." ஃபிஃபா உலகக்கோப்பை மேடையில் லமைன் யமால் தம்பியின் கியூட் ரியாக்ஷன் வைரல்
ஃபிஃபா உலகக்கோப்பை மேடையில் லமைன் யமால் தம்பியின் கியூட் ரியாக்ஷன் வைரல்

"மெடலை பார்த்ததும் தம்பி பண்ணிய வேலை..." ஃபிஃபா உலகக்கோப்பை மேடையில் லமைன் யமால் தம்பியின் கியூட் ரியாக்ஷன் வைரல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2026
11:27 am

செய்தி முன்னோட்டம்

2026 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயது இளம் புயல் லமைன் யமால், ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், இறுதிப் போட்டிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அவரை விட அவரது 3 வயது தம்பி கீன் தான் உலக ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்துப் பெரும் வைரல் சென்சேஷனாக மாறியுள்ளார்.

கியூட் வீடியோ

மெடலைப் பார்த்ததும் துள்ளிக் குதித்த கீனின் கியூட் வீடியோ

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணிக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அப்போது மேடையில் லமைன் யமால் தனது சாம்பியன் மெடலைப் பெற்றுக் கொண்ட போது, கேலரியில் இருந்த அவரது குட்டி தம்பி கீன் உணர்ச்சிவசப்பட்டுத் துள்ளிக் குதித்து, கைகளை அசைத்து அண்ணனை உற்சாகப்படுத்தினார்.

இந்தக் கியூட் வீடியோக் கிளிப் தற்பொழுது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT

குட்டி சென்சேஷன்

ஸ்பெயின் அணியின் டாப் ரசிகனாக மாறிய குட்டி சென்சேஷன்

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய அனைத்து 8 போட்டிகளிலும் கீன் மைதானத்திற்கு வந்து அண்ணனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார்.

கடந்த போட்டிகளில் மைதானத்தின் பெரிய திரையில் கீன் தனது நாக்கை நீட்டி வேடிக்கையான முகபாவனைகளைச் செய்த போது, அதை மைதானத்தில் இருந்து பார்த்த யமால் சிரித்த நிகழ்வும் ஏற்கனவே வைரலானது.

ஸ்பெயின் ஊடகங்கள் இந்த 3 வயது சிறுவனை "2026 உலகக்கோப்பையின் ஆகச்சிறந்த பிரேக்அவுட் ஸ்டார்" என்று கொண்டாடி வருகின்றன.

ADVERTISEMENT

போராட்டம்

120 நிமிட போராட்டம் மற்றும் சாம்பியன் மகுடம்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணிகள் மோதின.

90 நிமிடங்கள் வரை இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

இறுதிப் போட்டியில் முழுமையாக 120 நிமிடங்களும் விளையாடிய யமால், ஸ்பெயின் அணியின் தாக்குதல் ஆட்டத்திற்குப் பக்கபலமாக இருந்தார்.

106வது நிமிடத்தில் மாற்று வீரர் ஃபெரான் டோரஸ் அடித்த ஒற்றை கோல் மூலம் அர்ஜென்டினாவின் அசுரக் கோட்டையைத் தகர்த்து ஸ்பெயின் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

விருது

மெஸ்ஸியை முந்தி தங்கப் பந்து விருதை வென்ற கேப்டன் ரோத்ரி

இறுதிப் போட்டி முடிந்தவுடன் இந்த உலகக்கோப்பைத் தொடரின் சிறந்த வீரருக்கான மதிப்புமிக்க தங்கப் பந்து விருது ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோத்ரிக்கு வழங்கப்பட்டது.

தொடர் முழுவதும் ஸ்பெயினின் 7 தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருந்ததற்காக அவர் இந்த உயரிய விருதைப் பெற்றார்.

இத்தொடரில் 8 கோல்களை அடித்து அசத்திய அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்தைப் பிடித்து 'வெள்ளிப் பந்து' விருதையும், பிரான்சின் எம்பாப்பே 'வெண்கலப் பந்து' விருதையும் வென்றனர்.

ADVERTISEMENT