வெளியுறவுத்துறை: செய்தி
12 Nov 2024
டொனால்ட் டிரம்ப்விவேக் ராமசாமிக்கு கல்தாவா? வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை தேர்வு செய்கிறாரா டிரம்ப்?
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது முறையாக வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
02 Nov 2024
கனடாஅமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்
கனடா மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
17 Oct 2024
கனடா'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':
தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
17 Oct 2024
ஜஸ்டின் ட்ரூடோஇந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
16 Oct 2024
எஸ்.ஜெய்சங்கர்SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
15 Oct 2024
கனடாஇந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
05 Oct 2024
இந்தியாஎஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
04 Oct 2024
எஸ்.ஜெய்சங்கர்வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
03 Oct 2024
இந்தியாஅமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷனின் (USCIRF) சமீபத்திய அறிக்கையை இந்திய அரசாங்கம் கடுமையாக நிராகரித்துள்ளது.
02 Oct 2024
ஈரான்ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
செவ்வாயன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை ஒரு பரந்த போரின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுவதால், ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
13 Sep 2024
எஸ்.ஜெய்சங்கர்கடத்தப்பட்ட IC421 விமானத்தில் எனது தந்தை இருந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி தகவல்!
ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக 1984ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 421 இல் தனது தந்தை இருந்ததை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.
11 Aug 2024
இந்தியாஇந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93.
05 Aug 2024
பங்களாதேஷ்பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது.
15 Jul 2024
துபாய்மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
11 Jun 2024
இந்தியாசீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு
23 May 2024
பாலியல் தொல்லைபிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.
15 May 2024
இந்தியாபொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.
08 May 2024
மாலத்தீவுநாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர்
மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.
25 Apr 2024
மணிப்பூர்'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.
15 Apr 2024
ஈரான்கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
05 Apr 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு
பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது.
04 Mar 2024
இந்தியாஇந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில்
இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.
05 Jan 2024
அமெரிக்காஅமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்
அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
02 Jan 2024
இந்தியா'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர்
"இந்தியாவை அடிபணிய வைப்பதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதே" பாகிஸ்தானின் முக்கியக் கொள்கை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.
28 Dec 2023
விளாடிமிர் புடின்போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
24 Dec 2023
அமெரிக்காகலிபோர்னியாவில் சிதைக்கப்பட்ட இந்து கோயில்: இந்திய-அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்துக்கோயில் சிதைக்கப்பட்ட சம்பவத்தை, கடுமையாக கண்டித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
23 Dec 2023
எஸ்.ஜெய்சங்கர்அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.
17 Dec 2023
இந்தியாகனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.
17 Dec 2023
இங்கிலாந்துலண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்
இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.
15 Dec 2023
அமெரிக்கா"செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதி செய்ததாக, அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவின் குடும்பத்தை, அவரின் விடுதலைக்காக செக் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023
அமித்ஷா"இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
14 Dec 2023
கைதுதமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்து தற்போது தற்போது அந்நாட்டு வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று(டிச.,14) கடிதம் எழுதியுள்ளார்.
10 Dec 2023
பாலஸ்தீனம்பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.
05 Dec 2023
அமெரிக்காடெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,
29 Nov 2023
இந்தியாபயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்துள்ளது.
24 Nov 2023
சிங்கப்பூர்தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.
24 Nov 2023
கத்தார்முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது
உளவு பார்த்த குற்றத்திற்காக 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான, இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது.
16 Nov 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார்.
10 Nov 2023
ஏர் இந்தியாகாலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 Nov 2023
இந்தியாஇந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம்
இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளின் இடையே நல்லுறவு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று(நவ.,10)டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
08 Nov 2023
இந்தியாநவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்
ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.
05 Nov 2023
இஸ்ரேல்'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.
03 Nov 2023
அமெரிக்காஅமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2023
இந்தியா'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சர்
பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023
இந்தியா41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கனேடிய தூதர்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனேடிய அதிகாரிகள் இந்திய விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்த கவலைகள்" இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
16 Oct 2023
இஸ்ரேல்இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் பரவாமல் தடுக்கும் விஷயத்தில் அரபு நாடுகள் உறுதியாக இருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023
இஸ்ரேல்'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
13 Oct 2023
இஸ்ரேல்சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாட்டின் ஆயுதக்குழுவான ஹமாஸ் படையினர் இடையே கடந்த 7ம்தேதி முதல் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
13 Oct 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.
12 Oct 2023
இந்தியாஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையேயான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவை அடியோடு வேரறுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.
10 Oct 2023
கேரளா'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.