LOADING...
நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை
நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடம்

நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
08:25 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாத்துரா ஆகிய சர்ச்சைக்குரியப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு இந்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை

கள உண்மை நிலையை மாற்றாது

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அரசு வட்டாரங்கள் கூறுகையில், நேபாளத்தின் இந்த நடவடிக்கை ஒரு ஒருதலைப்பட்சமான செயல் என்றும், இது களத்தில் உள்ள உண்மை நிலையை மாற்றாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. மேலும், இந்த 'செயற்கைப் பிராந்திய விரிவாக்கம்' ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா எச்சரித்துள்ளது. அரசு வட்டாரத்தில் கூறுகையில், "பிராந்திய உரிமைகோரல்கள் குறித்த எங்கள் நிலைப்பாடு மாறவில்லை. அத்தகைய உரிமைகோரல்கள் நியாயமானவையோ அல்லது வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலோ இல்லை. ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்கைப் பிராந்திய விரிவாக்கமும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள்

தொடரும் பேச்சுவார்த்தைகள்

இந்த வரைபடம் தொடர்பான சர்ச்சை கடந்த ஒரு வருடமாகக் குரிய நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் நேபாளத்துடன் ஆக்கப்பூர்வமான தொடர்புக்குத் தயாராக இருப்பதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதன் மூலம் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா திறந்த மனதுடன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement