LOADING...
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, MEA இன்று எதிர்வினையாற்றியுள்ளது

பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2025
06:57 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் பேசுகையில், "பாகிஸ்தானின் ரகசியமான மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் அதன் வரலாற்றிற்கு புதியதல்ல. பல தசாப்தங்களாக நீடித்த கடத்தல், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு மீறல்கள், ரகசிய கூட்டாண்மைகள் மற்றும் ஏ.க்யூ. கான் நெட்வொர்க் வழியாக அணு ஆயுதப் பரவல் ஆகியவைதான் அதன் மையமாக உள்ளது." என்று தெரிவித்தார். மேலும், "பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது" என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.

டிரம்ப் 

டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 2 அன்று CBS-ன் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை ரகசியமாக நடத்தி வருகின்றன என்று எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், 1998-ல் பாகிஸ்தான் நடத்திய அணு ஆயுத சோதனைகளின் தீவிரத்தை ஒத்திருந்ததாக யூகங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், "நாங்கள் அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்கும் முதல் நாடாக இருக்க மாட்டோம்," என்று ஒரு மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி CBS செய்திக்குத் தெரிவித்துள்ளார்.