NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
    ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் எஸ். ஜெய்சங்கர்

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2025
    07:38 am

    செய்தி முன்னோட்டம்

    வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.

    அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காபூல் கண்டனம் தெரிவித்ததையும், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    தாலிபான்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதல் முறையாக கலந்துரையாடிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே "நம்பிக்கையை ஏற்படுத்த" ஆப்கானிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா வியாழக்கிழமை வரவேற்றது.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்ததற்காக முத்தகிக்கும் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

    ஆதரவு

    ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு 

    வியாழக்கிழமை ஒரு தொலைபேசி உரையாடலில், ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    மேலும் அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலை ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சி கண்டித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜெய்சங்கர் முத்தாகிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    அழைப்புக்குப் பிறகு தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், ஜெய்சங்கர்,"இன்று மாலை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் நல்ல உரையாடல். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததற்கு ஆழ்ந்த நன்றி." என பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Good conversation with Acting Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi this evening.

    Deeply appreciate his condemnation of the Pahalgam terrorist attack.

    Welcomed his firm rejection of recent attempts to create distrust between India and Afghanistan through false and…

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 15, 2025

    வரலாறு

    ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவின் உறவு

    முன்னதாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறையில் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரிவின் இயக்குநர் ஜெனரலான இந்திய சிறப்புத் தூதர் ஆனந்த் பிரகாஷ், அமீர் கான் முத்தகியைச் சந்திக்க காபூலுக்குச் சென்றார்.

    2021இல் காபூலில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் அரசியல் அளவிலான தொடர்பை இது குறிக்கிறது.

    இந்த ஆண்டு ஜனவரியில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி துபாயில் முத்தாகியை சந்தித்தார்.

    இதற்கு முன் கடைசியாக அரசியல் மட்டத் தொடர்பு 1999-2000ஆம் ஆண்டில் நடந்தது.

    அப்போது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், டிசம்பர் 1999இல் காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தாலிபான் வெளியுறவு அமைச்சர் வக்கீல் அகமது முத்தவாகிலுடன் தொடர்பில் இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்.ஜெய்சங்கர்
    வெளியுறவுத்துறை
    தாலிபான்
    பஹல்காம்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி அமெரிக்கா
    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்

    வெளியுறவுத்துறை

    பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை
    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ துபாய்

    தாலிபான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்

    பஹல்காம்

    காலக்கெடுவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்? பாகிஸ்தான்
    தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பாகிஸ்தான்; இந்திய விமானங்களுக்கு தடையால் மில்லியன் டாலர் வருவாய் இழப்பு பாகிஸ்தான்
    இந்தியர்கள் காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்கிறார் அஜித் பட வில்லன் பாலிவுட்
    இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025