
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையே வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
செய்தி முன்னோட்டம்
15 ஆண்டுகளில் முதல் முறையாக, பங்களாதேஷுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் சார்பாக அங்கு சென்றுள்ள அம்னா பலோச், வெளியுறவு அலுவலக ஆலோசனை (FOC) செயல்முறையின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர் முகமது ஜாஷிம் உதீனை சந்திக்கிறார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, குறிப்பாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் கீழ் உள்ள வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிக ஈடுபாடு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
தீவிரவாதம்
பங்களாதேஷில் தீவிரவாதம்
பங்களாதேஷில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பதோடு, பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மரபை அழிக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நேரத்தில், இந்த வருகை ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர நடவடிக்கையைக் குறிக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இடைக்கால நிர்வாகத்தை விமர்சித்தார்.
அது சுதந்திரப் போராளிகளை அவமதிப்பதாகவும், அவர்களின் மரபை சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பங்களாதேஷில் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட பாகிஸ்தானின் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவும் இந்த வருகை பார்க்கப்படுகிறது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சாருல்லா பங்களா குழுவின் தலைவரான ஜாஷிமுதீன் ரஹ்மானி போன்ற தீவிரவாத பிரமுகர்களின் விடுதலை பிராந்திய கவலைகளை எழுப்பியுள்ளது.