கனடா பள்ளியில் பயங்கரம்: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி, பலர் படுகாயம்
செய்தி முன்னோட்டம்
கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராயல் கனடியன் மவுண்டட் போலீஸார் (RCMP) உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மதியம் சுமார் 1:20 மணியளவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை உறுதிப்படுத்திய காவல்துறையினர், இதில் 10 பேர் பலி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் காயம் குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
தேடுதல்
அரசு நடவடிக்கை
இந்தத் தாக்குதலில் இரண்டாவது நபருக்கு தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட அவசர எச்சரிக்கை செய்தியில், "பழுப்பு நிறக் கூந்தல் உடைய, ஆடை (Dress) அணிந்த ஒரு பெண்ணைத் தேடி வருவதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர அண்டை மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியின் எம்.எல்.ஏ லாரி நியூஃபெல்ட், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க உடனடியாக விக்டோரியாவிலிருந்து டம்பிளர் ரிட்ஜ் திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.