
ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று எந்த தொலைபேசி அழைப்பும் நடைபெறவில்லை என்று இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Weekly Media Briefing by the Official Spokesperson (October 16, 2025)
— Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2025
https://t.co/wexxLMoW7g
விளக்கம்
வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், MEA செய்தி தொடர்பாளர்,"இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றதாக கூறப்படும் தொலைபேசி அல்லது உரையாடலை பொறுத்தவரை, நேற்று இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்பு கூட இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார். முன்னதாக புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த ஊடக சந்திப்பில் டிரம்ப் பேசியபோது, மோடி தொலைபேசி உரையாடலில் இந்த உறுதியை அளித்ததாகவும், இது உக்ரைன் போரில் மாஸ்கோவைப் பிரிக்கும் முயற்சியில் "ஒரு பெரிய படி" என்றும் கூறியிருந்தார். தற்போது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது மாஸ்கோவின் நிதி வலிமையை குறைக்கும் என்று வாஷிங்டன் வாதிடுகிறது.
வலியுறுத்தல்
இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது
டிரம்பின் கூற்றை நேரடியாக மறுக்காமல், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முந்தைய அறிக்கையில், இந்தியாவின் எரிசக்தி முடிவுகள் நுகர்வோர் நலன்கள் மற்றும் நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகங்களைப் பாதுகாப்பது ஆகிய இரட்டை நோக்கங்களால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றன என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி முடிவுகளை அதன் தேசிய நலன்களின் அடிப்படையில் மட்டுமே எடுக்கிறது என்று கூறியதன் மூலம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என்ற அதன் நிலைப்பாட்டையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.