LOADING...
சூர்யா - வெங்கி அட்லூரி இணையும் 'விஸ்வநாத் & சன்ஸ்': ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியீடு
'சூர்யா 46' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு 'விஸ்வநாத் & சன்ஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யா - வெங்கி அட்லூரி இணையும் 'விஸ்வநாத் & சன்ஸ்': ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு 'விஸ்வநாத் & சன்ஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சூர்யா நடுத்தர வயது தோற்றத்தில், கையில் ஒரு குழந்தை மற்றும் பால் பாட்டிலுடன் காட்சியளிக்கிறார். இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி ஆகியோர் ஏற்கனவே குறிப்பிட்டது போல, சூர்யாவின் கதாபாத்திரம் 2005-ல் வெளியான 'கஜினி' படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை ஒத்திருக்கும். "வித்தியாசமான காதல், ஒரு நோக்கத்துடன் கூடிய குடும்பம் — ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ஜூலையில் வருகிறோம்" என சூர்யா தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

படத்தின் நட்சத்திர நடிகர் நடிகையர் விவரங்கள்

'பிரேமலு' புகழ் மமிதா பைஜு சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். நடுத்தர வயது மனிதனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின் ரவீனா டாண்டன், 2001-ல் வெளியான 'ஆளவந்தான்' படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார். இவர்கள் தவிர, ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

Advertisement