Page Loader
பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்
பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தல்

பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2025
07:35 pm

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தவும், அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றவும் பாகிஸ்தானை வலியுறுத்துமாறு இந்தியா துருக்கிக்கு அறிவுறுத்தி உள்ளது. வியாழக்கிழமை (மே 22) புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சர்வதேச உறவுகள் என்பது ஒருவருக்கொருவர் சென்சிட்டிவான விஷயங்களில் கவனமாக இருப்பதைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது பாதுகாத்து வரும் பயங்கரவாத நெட்வொர்க்கிற்கு எதிராக நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவும் துருக்கி பாகிஸ்தானை கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் துருக்கி 

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்திய பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு துருக்கி ஆதரவளித்தது தெரியவந்ததும், அதிகரித்து வரும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதமேந்திய ட்ரோன்களை விற்றதாகவும், அதன் இயக்குபவர்கள் மூலம் செயல்பாட்டு வழிகாட்டுதலையும் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரந்தீர் ஜெய்ஸ்வால் செலிபி விமானப் போக்குவரத்து விஷயத்தையும் குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள துருக்கிய தூதரகத்துடன் விவாதங்கள் நடத்தப்பட்டதையும் அவர் தெரிவித்தார். துருக்கியின் இந்திய விரோத செயல்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி ரூர்க்கி உள்ளிட்ட பல மதிப்புமிக்க இந்திய கல்வி நிறுவனங்கள் துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை நிறுத்தி வைத்துள்ளன.