விசா: செய்தி
இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 'தேவி' என்ற ஏஐ அவதாரத்தை அறிமுகம் செய்தது
இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி உதவித்தொகை, வணிக முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தூதரகச் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக 'Dewi' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் சர்வதேச மாணவர்களுக்குப் பேரிடி: ஆயிரக்கணக்கான விசா விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை வாய்ப்புகள் ரத்து
பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய சேர்க்கை வாய்ப்புகளை பெருமளவில் ரத்து செய்து வருகின்றன.
அமெரிக்காவில் 15,000 பேருக்கு வேலை; கிரீன் கார்டு சிக்கல்களுக்கு இடையே TCS வெளியிட்ட மெகா அறிவிப்பு
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அமெரிக்காவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிரீன் கார்டு திட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தடை: அமெரிக்காவிற்கு நாஸ்காம் பதிலடி
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) கிரீன் கார்டு திட்டத்தில் இருந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவில் PERM திட்ட இடைநீக்கம்: H-1B இந்திய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், TCS, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்பிஎல், காக்னிசன்ட், கேப்ஜெமினி உள்ளிட்ட இந்திய முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற அமெரிக்க நிறுவனங்களை 'PERM' திட்டத்தில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் அதிர்ச்சி! கிரீன் கார்டு சான்றிதழ் திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் இடைநீக்கம்
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) முறைகேடு செய்ததாகக் கூறி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, HCL மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி: OPT பணி வாய்ப்பிற்கு $70,000 கட்டணம் விதிக்க திட்டம்
அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் சர்வதேச மாணவர்கள் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றுவதற்கான விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்திற்குப் புதிய கட்டணங்களை விதிக்க அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் Apple Pay அறிமுகம்; இனி OTP, PIN இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்
அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் தனது 'Apple Pay' சேவை சேவையை இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க விசா பெறுவதில் இந்தியர்களுக்குச் சிக்கல்: காத்திருப்பு நேரம் உயர்வு மற்றும் புதிய கட்டணங்கள் அறிமுகம்
அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் இருமடங்கு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியா - நேபாள உறவு "மிகச்சிறந்தது": நியூயார்க்கில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனல் புகழாரம்
நியூயார்க்கில் நடைபெற்ற 'ஆசியா சொசைட்டி' நிகழ்ச்சியில் உரையாற்றிய நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனல், இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு "மிகச்சிறந்தது" மற்றும் "பரிமாணங்கள் கொண்டது" என்று பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி: புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்தார் மார்கோ ரூபியோ
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை கிடைக்கும் சட்டத்தை பயன்படுத்தி, வணிக நோக்கில் நடத்தப்படும் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விசா கட்டுப்பாட்டு கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
மலேசியாவில் சுற்றுலா விசா மூலம் வேலை செய்யத் தடை: இந்திய பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை
மலேசியாவிற்கு இலவச விசா சலுகையை பயன்படுத்தி செல்லும் இந்தியப் பயணிகள், சுற்றுலா விசாவை கொண்டு அங்கு வேலை தேடுவதோ அல்லது வேலை செய்வதோ சட்டவிரோதமானது என மலேசியாவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எச்சரித்துள்ளது.
H-1B விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா கொடுத்த பேரதிர்ச்சி; வேலை இழந்தால் உடனடியாக வெளியேற ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் H-1B உள்ளிட்ட தற்காலிக பணி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்தால், புதிய நிறுவனத்தை தேட அல்லது தாய்நாடு திரும்ப அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை முற்றிலும் ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
விசா மோசடி விசாரணை: CTS கிரீன்-கார்டு விண்ணப்பங்களை நிறுத்தி வைத்த அமெரிக்கா
அமெரிக்க தொழிலாளர் துறை, காக்னிசண்டின் நிரந்தரத் தொழிலாளர் சான்றளிப்பு (PERM) தொடர்பான விண்ணப்பச் செயல்முறையை நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கும் முறையை தடை செய்ய அமெரிக்கா நடவடிக்கை
H-1B விசா வைத்திருப்பவர்களின் குறிப்பிட்ட வாழ்க்கை துணைவர்களுக்கான பணி அனுமதிகளை ரத்து செய்ய அமெரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவில் உயர்கல்வி பயிலத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்வு: ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி
அமெரிக்காவில் புதிய H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை $100,000-க்கும் அதிகமாக (சுமார் $103,265) நிரந்தரமாக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டம் வெளியிட்டுள்ளது.
2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு
அமெரிக்காவில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ள அல்லது அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 2,00,000 வெளிநாட்டினரின் பிசினஸ் (B1) மற்றும் சுற்றுலா (B2) விசாக்களை ரத்து செய்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.
பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகளுக்கும் விசா நேர்காணல் கட்டாயம் என அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் சிறார்கள், வயது வித்தியாசமின்றி விசா நேர்காணலின் போது தூதரகத்தில் நேரில் ஆஜராவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 3,323 இந்தியர்கள் நாடு கடத்தல்! கனடாவின் புதிய விதிகளால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்; பின்னணி என்ன?
கனடா அரசு தனது நாட்டின் குடிவரவு விதிகளையும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க குடியுரிமைக்கு தடை: 'பிரசவ சுற்றுலா' மீது டிரம்ப் நடவடிக்கை
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் 'பிரசவ சுற்றுலா'வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் வேலை பார்க்க ₹85 லட்சமா? சர்வதேச மாணவர்களை அச்சுறுத்தும் OPT கட்டண திட்டம் குறித்து ஒரு பார்வை
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பிற்கு பிறகு அங்கு தங்கி பணிபுரிய உதவும் 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்'(OPT) முறைக்கு $100,000 கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது சர்வதேச மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி: அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு $1,00,000 புதிய கட்டணம்?
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெற்ற பிறகு, அங்கு தங்கி வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்; தவறவிட்டால் எவ்வளவு அபராதம்?
கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய அமெரிக்க கிரீன் கார்டு மசோதா இந்தியர்களுக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது
H-1B விசா வைத்திருப்பவர்கள் உட்பட, குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமைக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு மசோதாவிற்கு அமெரிக்க செனட்டர் ஒருவர் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
'நீரவ் மோடியை நாடுகடத்தாததால் இந்தியாவிற்கு பிரிட்டன் மீது கோபம்': பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் $2 பில்லியன் மதிப்பிலான கடன் மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியதாக பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் தெரிவித்துள்ளார்.
ஐடி துறையினருக்கு மாபெரும் நிம்மதி! $100,000 H-1B விசா கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றம்! டிரம்ப் அரசிற்கு பலத்த பின்னடைவு
புதிய H-1B விசாக்களைப் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு $100,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கல்வி ஆவணச் சரிபார்ப்புக்காக இந்தியாவின் டிஜிலாக்கரை ஐக்கிய அரபு அமீரகம் பயன்படுத்த உள்ளது
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) இணைந்து, இந்தியாவின் டிஜிலாக்கரை அந்நாட்டின் டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை! இந்திய மாணவர்களுக்குப் புதிய சிக்கல்
அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசா விதிமுறைகளில் மிகக் கடுமையான புதிய மாற்றங்களை இறுதி செய்துள்ளது.
கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அமெரிக்கர்; பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லை பகுதியான சோனாலி அருகே, முறையான பயண ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற 36 வயது அமெரிக்கக் குடிமகன் ஒருவரை SSB பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை: கனடிய காவல்துறை பல்டி
2023 ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதற்கும், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலக பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2026: இந்தியா 125 ஆவது இடத்திற்கு சரிவு; உலகளாவிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சர்வதேச குடியுரிமை மற்றும் ஆலோசனை நிறுவனமான குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் வெளியிட்டுள்ள 5 ஆவது வருடாந்திர குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (GPI) 2026 தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் உலக அளவில் 125 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பேச்சுவார்த்தையை துவங்க கோரிக்கை: பிரதமர் மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப்புக்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்
இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக் கோரி கூட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாதா? டிரம்பின் தடையை சுக்குநூறாக்கிய உச்ச நீதிமன்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
2 வருடத் தடை நீங்கியது! வங்கதேச மக்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
வங்கதேச குடிமக்களுக்கு இந்தியாவிற்கு வருவதற்கான சுற்றுலா விசா சேவைகளை மீண்டும் வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
வெளிநாடு போறீங்களா? இந்த நாடுகளுக்கு ட்ராவல் இன்சூரன்ஸ் இல்லைனா நோ என்ட்ரி! கட்டாய விதிகள்
முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், தங்களது லக்கேஜ் தொலைந்து போனால் அல்லது ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் மட்டுமே ஒரு பாதுகாப்புக்காக ட்ராவல் இன்சூரன்ஸ் (Travel Insurance) எடுப்பார்கள்.
'எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்': FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 தொடரின் தங்களின் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 2-2 என டிரா செய்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகளால் ஈரான் அணியினர் உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் $100,000 H-1B விசா கட்டணம் ரத்து செய்த நீதிமன்றம்; இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு விதித்திருந்த 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹83 லட்சம்) என்ற பிரம்மாண்ட கட்டண உயர்வை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியர்களுக்கு புதிய EB-2 விசாக்கள் வழங்குவதை அமெரிக்கா ஏன் நிறுத்தி வைத்துள்ளது?
இந்தியக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான இரண்டாம் முன்னுரிமை (EB-2) குடியேற்ற விசாக்களின் வருடாந்திர ஒதுக்கீடு அமெரிக்காவில் தீர்ந்துவிட்டது.
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
இந்திய விசா ஆவணங்களை எப்படி தயாரிப்பது?
இந்திய விசாவுக்குத் தேவையான ஆவணங்களை தயார் செய்வது என்பது சிலசமயம் சிரமமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், என்னென்ன ஆவணங்கள் தேவை என்று நீங்கள் தெரிந்துகொண்டால், இந்த செயல்முறையை மிக எளிதாக முடித்துவிடலாம்.