LOADING...
இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்
இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
10:34 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற சில மருத்துவ நிலைகளின் அடிப்படையில் வெளிநாட்டினருக்கு விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை வழங்க அமெரிக்க விசா அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை உலகெங்கிலும் உள்ள தூதரகங்களுக்கு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல் விசா அதிகாரிகளுக்கு, விண்ணப்பதாரரின் உடல்நலக் குறைபாடுகள் அல்லது வயது காரணமாக அவர்கள் அமெரிக்காவிற்கு பொதுச் சுமையாக (Public Charge) மாறக்கூடும் என்று கருதப்பட்டால், விசா வழங்க மறுக்கலாம் என்று அறிவுறுத்துகிறது.

நோய்கள்

நோய்களின் பட்டியல்

இதய நோய்கள், சுவாச நோய்கள், புற்றுநோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நீண்டகால நோய்களும் இதில் அடங்கும். குறிப்பாக, ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் உடல் பருமனை ஒரு முக்கியக் காரணியாகக் கருதி, அது அதிக செலவுள்ள நீண்ட கால மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்றும் மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் மருத்துவச் செலவுகளை அவர்கள் அரசாங்க உதவியை நாடாமல் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்யும் நிதி வழிமுறைகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் மதிப்பிடுவார்கள்.

குடும்பம்

குடும்பத்தினரின் உடல் நலன்

விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாட்பட்ட நோய்கள் அல்லது சிறப்புத் தேவைகள் இருந்தால், அது விண்ணப்பதாரரின் வேலையைத் தொடர முடியாத நிலைமையை ஏற்படுத்தி, பொதுச் சுமையாக மாற்றுமா என்றும் அதிகாரிகள் மதிப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில், அமெரிக்கா விசாக்களுக்கான சுகாதார பரிசோதனைகள் காசநோய் போன்ற தொற்று நோய்களில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், இந்த புதிய உத்தரவு, நாள்பட்ட தொற்று அல்லாத நோய்களுக்கும் விசா தகுதியை இணைத்துள்ளது. இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

Advertisement