LOADING...
அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
விசா விதிகளை மாற்றுவது குறித்து இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன

அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
02:43 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா விதிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் (சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகள்) இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள F-1 விசா விதிகளின்படி, மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்தவுடன் அமெரிக்காவை விட்டு வெளியேறி, தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற உறுதியான நோக்கம் (Non-immigrant Intent) கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டும். விசா நேர்காணலின்போது, மாணவர்கள் தங்கள் தாய் நாட்டில் உள்ள சொத்து, குடும்ப உறவுகள் அல்லது தொழில் வாய்ப்புகள் போன்ற வலுவான பிணைப்புகளைக் (Ties) காட்ட வேண்டும்.

மாற்றம்

எதிர்பார்க்கப்படும் மாற்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள 'DIGNITY Act of 2025' என்ற சட்ட மசோதா, இந்த 'திரும்பி செல்லும் நோக்கம்' என்ற விதியை நீக்க பரிந்துரைக்கிறது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், F-1 விசா 'இரட்டை நோக்கம்' (Dual Intent) கொண்ட விசாவாகக் கருதப்படும்.

தாக்கம்

இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம்:

இந்த விதி நீக்கப்பட்டால், இந்திய மாணவர்கள் தங்கள் படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் வேலை பார்க்க அல்லது நிரந்தரமாக தங்க விரும்பினாலும், விசா மறுக்கப்படுவது குறையலாம். தற்போது, இந்த 'திரும்பிச் செல்லும் நோக்கம்' நிரூபிக்கப்படாததால், பல இந்திய மாணவர்களின் விசாக்கள் 'பிரிவு 214(b)'-இன் கீழ் நிராகரிக்கப்படுகின்றன. விசா நேர்காணல் அதிக அகநிலைத்தன்மையுடன் (Subjectivity) இல்லாமல், எளிதாகவும், மாணவர்களின் படிப்புத் தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகவும் மாறலாம்.

Advertisement

மற்றொரு மாற்றம்

F-1 விசா வைத்திருப்பவர்கள் 'அந்தஸ்தின் கால அளவு' மாற்ற பரிந்துரை

மேலும் தற்போதுள்ள விதியின் கீழ், F-1 விசா வைத்திருப்பவர்கள் Duration of Status -D/S வரை நாட்டில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை மற்றும் விசா நிலையை சரியாகப் பராமரிக்கும் வரை தங்கி இருக்கலாம். இது படிப்பு நீட்டிப்புகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கியது. தற்போது D/S முறைக்கு பதிலாக, F-1 விசா வைத்திருப்பவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படலாம். 4 ஆண்டுகளுக்கு மேல் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு முறையும் USCIS-இல் நீட்டிப்புக்கு விண்ணப்பித்து, புதிய சரிபார்ப்புகளுக்கு (Vetting) உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு கூடுதல் நிர்வாகச் சுமையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும்.

Advertisement