LOADING...
இந்தியாவில் அதிக H-1B விசா மோசடி குறிப்பாக சென்னையில் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் குற்றச்சாட்டு
H-1B விசா நடைமுறையில் அளவில்லா மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு

இந்தியாவில் அதிக H-1B விசா மோசடி குறிப்பாக சென்னையில் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட், H-1B விசா நடைமுறையில் அளவில்லா மோசடி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையும், அதன் முறைகேடுகளும் சட்ட வரம்புகளை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதன்படி, நாடு முழுவதும் H-1B விசாக்களுக்கான வருடாந்திர உச்ச வரம்பு 85,000 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் மட்டும் 2,20,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது அனுமதிக்கப்பட்ட சட்ட வரம்பைவிட 2.5 மடங்கு அதிகம். அதோடு ஒட்டுமொத்த H1 B விசாக்களில் சுமார் 71% இந்தியாவுக்கு வழங்கப்படுவதாகவும், இது ஒரு மோசடி என்றும் பிராட் கூறியுள்ளார்.

குற்றசாட்டு

சென்னை தூதரகம் மூலமாக அதிக H1 B விசாக்கள் கையாளப்படுகிறது

2024 ஆம் ஆண்டில், சென்னை அமெரிக்கத் தூதரகம் சுமார் 2,20,000 எச்-1பி விசாக்களையும், கூடுதலாக 1,40,000 H-4 (சார்பு) விசாக்களையும் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தூதரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் இருந்து வரும் விண்ணப்பங்களைச் செயல்படுத்துகிறது, இது உலகின் அதிகச் சுறுசுறுப்பான H-1B மையங்களில் ஒன்றாகும். முன்னாள் அமெரிக்க வெளியுறவுப் பணி அதிகாரி மவஷ் சித்திக், இந்த மோசடி குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார். 2005 முதல் 2007 வரை தாம் கையாண்ட விசாக்களில், இந்தியாவிலிருந்து வந்த H-1B விசாக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை போலியானவை என்றும், அவை போலியான சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களை கொண்டவை என்றும் அவர் கூறினார்.