ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
செவ்வாயன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை ஒரு பரந்த போரின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுவதால், ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை அறிவுறுத்தியது. ஈரானில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். "நாங்கள் அண்மைக்காலமாக பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்திய நாட்டவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரானில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். " என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்
ஈரான் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் மீது 180 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை இந்த தாக்குதல் குறிக்கிறது. பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறினாலும், டெல் அவிவ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், தெஹ்ரானை "கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் பிராந்திய அளவிலான போர் அச்சுறுத்தலை எழுப்புகிறது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் செவ்வாயன்று இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கான ஆலோசனையை வெளியிட்டது. இந்திய குடிமக்கள் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நெறிமுறைகளை கடைபிடிக்கவும்.