வர்த்தக ஒப்பந்தம்: செய்தி
"இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்": டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா கடும் பதிலடி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்: மத்திய அமைச்சர்
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நவம்பர் 2025 க்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜப்பானிய கார்கள் மீதான வரிகளை 15% ஆகக் குறைக்க டிரம்ப் உத்தரவு
ஜப்பானிய கார் இறக்குமதிகள் மீதான வரிகளை 27.5% லிருந்து 15% ஆகக் குறைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
"ஒருதலைப்பட்சமானது": 50% வரி சர்ச்சைக்கு மத்தியில் அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து டிரம்ப்
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தீவிரப்படுத்தியுள்ளார்.
சீனா அரிய பூமி காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரிகளை விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
சீனா தனது அரிய-பூமி காந்தங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
"எங்களுக்கு எது லாபமோ அங்கேருந்து எல்லாம் எண்ணெய் வாங்குவோம்": ரஷ்யாவுக்கான இந்திய தூதர்
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரித்த போதிலும், "சிறந்த ஒப்பந்தத்தை" வழங்கும் மூலங்களிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன்: டிரம்பின் வரிகளுக்கு எதிராக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த சீனா
அமெரிக்காவை "ஒரு கொடுமைப்படுத்துபவர்" என்று அழைத்த இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங், அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது, ஆனால் இப்போது வரிகளை பேரம் பேசும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.
உரங்கள், அரிய மண்...: இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்ட சீனா
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தற்போது இந்தியாவில் உள்ளார், அங்கு அவர் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார்.
ஆறாவது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரவிருந்த அமெரிக்க குழுவின் பயணம் ரத்து எனத் தகவல்
ஆகஸ்ட் 25-29 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (BTA) பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்றுக்காக இந்தியாவுக்கான தனது பயணத்தை அமெரிக்கா ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.
அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் ஓமனும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளன
இந்தியாவும், ஓமனும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் உள்ளன என்று அதிகாரி ஒருவர் PTI இடம் தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இந்தியா
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை என்று கண்டிஷன் போடும் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி, மற்றொரு குண்டை வீசியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை என தகவல்
டொனால்ட் டிரம்ப் அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிவிதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
90 நாடுகளுக்கு எதிரான டிரம்பின் புதிய வரிகள் அமலுக்கு வந்தது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 90க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான புதிய வரிகள் அமலுக்கு வந்துள்ளன.
இன்னும் முடியல...இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு டிரம்ப் எச்சரிக்கை
இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25சதவீத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து வாங்குவதால் இந்தியா மீது மேலும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி உயர்வு விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை "மிகக் கணிசமாக" உயர்த்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது
ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு "சட்டவிரோதமாக" அழுத்தம் கொடுத்ததற்காக டொனால்ட் டிரம்பை, ரஷ்யா வியாழக்கிழமை கடுமையாக சாடியது.
இந்தியாவிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்கிறது அமெரிக்கா? விரிவான புள்ளி விபரங்கள் மற்றும் வரி விதிப்பின் தாக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான கூடுதல் அபராதங்களுடன், ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் இருப்பது சிக்கலை ஏற்படுத்துகிறதாம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவின் அதிக வர்த்தக தடைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கோள் காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியா மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவுகளை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
நெருங்கும் ஆகஸ்ட் 1 காலக்கெடு; இந்தியாவிற்கு 25 சதவீதம் வரை வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் சூசக அறிவிப்பு
ஆகஸ்ட் 1, 2025 காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யாத நாடுகளுக்கு 15-20% வரிகள்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
வாஷிங்டனுடன் தனி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
டிரம்ப் 'மிகப்பெரிய' ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து FTA பிரிட்டிஷ் சொகுசு கார்களின் விலையைக் குறைக்குமா?
இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) பிரிட்டிஷ் சொகுசு கார்களை இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்ய உதவும்.
இந்தியா-இங்கிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: இதனால் எந்த பொருட்கள் மலிவடையும்?
இந்தியாவும், ஐக்கிய இராச்சியமும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளன.