LOADING...
"விளையாட வேண்டாம், எச்சரிக்கை!": உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்

"விளையாட வேண்டாம், எச்சரிக்கை!": உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் உலக நாடுகளை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
08:42 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு முறையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் ஏற்கனவே செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்கவோ அல்லது "விளையாடவோ" முயன்றால், முன்னெப்போதையும் விட அதிக வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தனது 'Truth Social' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், "பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றி வரும் நாடுகள், நீதிமன்றத் தீர்ப்பைப் சாதகமாக பயன்படுத்த நினைத்தால், அவர்கள் சமீபத்தில் ஒப்புக்கொண்டதை விட மிக மோசமான வர்த்தகத் தடைகளைச் சந்திக்க நேரிடும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எச்சரிக்கை

கடுமையான வரி விதிக்க அதிகாரம் உண்டு என மிரட்டும் டிரம்ப்

அவசரகால அதிகாரத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டாலும், பிற சட்டப்பிரிவுகளின் கீழ் இன்னும் வலிமையான மற்றும் "கடுமையான" வரிகளை விதிக்க தமக்கு அதிகாரம் உள்ளதாக அவர் வாதிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக 15 சதவீத இறக்குமதி வரியை அவர் அறிவித்துள்ளார். இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் திடீர் மாற்றங்களால் உலகச் சந்தையில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஒத்திவைத்துள்ளது. மேலும், பல நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் குறித்து புதிய விசாரணைகளை தொடங்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement