LOADING...
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வெளியிட்ட அதிரடி தகவல்
2025 ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது

மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வெளியிட்ட அதிரடி தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
10:59 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த போட்காஸ்ட் பேட்டி ஒன்றில், சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளின் பின்னணி குறித்த பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். லட்னிக் கூற்றுப்படி, 2025 ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது. "அதிபர் டிரம்ப் நேரடி தொடர்பில் இருக்கும்போதே இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். ஆனால், பிரதமர் மோடி அதிபரை தொடர்பு கொள்ளத் தயக்கம் காட்டினார். அந்தச் சமயம் தவறியதால், அடுத்தடுத்த வாரங்களில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தங்களை அறிவித்தது"என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வரி

"ஒப்பந்தம் தாமதமாவதால் இந்தியா மீது வரிகள் அதிகரிக்கிறது"

இந்த தாமதத்தின் காரணமாக இந்தியா தற்போது அதிக இறக்குமதி வரியைச் சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிக்கிறது. ஆனால், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இது 15% ஆகவும், வியட்நாமுக்கு 20% ஆகவும் உள்ளது. சரியான நேரத்தில் பேச்சுவார்த்தையை முடிக்காததால், இந்தியா இப்போது பழைய வரி விகிதத்திலேயே நீடிக்க வேண்டியுள்ளது என்று லட்னிக் விமர்சித்துள்ளார். இருப்பினும், லட்னிக் முன்வைக்கும் தரவுகளுக்கும், உண்மையில் நாடுகள் ஒப்பந்தம் செய்த தேதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வியட்நாம் மிக முன்னதாகவே ஒப்பந்தம் செய்திருந்தாலும், பிற நாடுகளை விட அதற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சர்வதேச வர்த்தக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement