ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! 5,000 பவுண்ட் 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் வீச்சு
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் நிலத்தடி இலக்குகளை துளைத்து சென்று அழிக்கும் திறன் கொண்ட 5,000 பவுண்ட் எடையுள்ள 'பங்கர்-பஸ்டர்' (Bunker-buster) குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி: ஈரானின் தெற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள 'Anti-ship' க்ரூஸ் ஏவுகணைத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு இந்த ஏவுகணைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால், அவற்றை முடக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026
பாதிப்பு
உலகளாவிய பாதிப்பு
மார்ச் முதல் வாரத்திலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து முடங்கியுள்ளதால், உலகளாவிய எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த போர் மூண்டது.
அதிருப்தி
நேட்டோ நாடுகள் மீது டிரம்ப் அதிருப்தி
இந்த தாக்குதலுக்கு சற்று முன்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கத் தனது அழைப்பை ஏற்க மறுத்த நேட்டோ நாடுகளை கடுமையாக விமர்சித்தார். "நேட்டோ நாடுகள் ஒரு மிகப்பெரிய முட்டாள்தனமான தவறை செய்கின்றன. அமெரிக்கா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் நினைப்பது தவறு. இது ஒரு மிகப்பெரிய சோதனை. எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, தனியாகவே ஈரானை எதிர்கொள்ள தயார்." பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள், போர் சூழல் தணியும் வரை தங்கள் நாட்டுப் போர்க்கப்பல்களை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.