LOADING...
"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி

"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் 'Zero Tolerance' கொள்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 2023, அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை குறிப்பிட்ட பிரதமர், "அந்தக் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்களது வலியை நாங்களும் உணர்கிறோம், உங்கள் துக்கத்தில் இந்தியாவும் பங்கு கொள்கிறது. எந்தவொரு காரணத்திற்காகவும் பொதுமக்களின் கொலையை நியாயப்படுத்த முடியாது," என்று ஆவேசமாக பேசினார். மேலும், மும்பை 26/11 தாக்குதலையும் நினைவு கூர்ந்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பாதுகாப்பு

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு

இந்தியா உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடாக திகழ்வதை சுட்டிக்காட்டிய பிரதமர், இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் 'நம்பகமான கூட்டாளிகள்' என்றும், ஏஐ (AI), சைபர் பாதுகாப்பு, விவசாய தொழில்நுட்பம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த 1950, செப்டம்பர் 17-ஆம் தேதி தான் அவர் பிறந்த தினம் என்பதையும் ஒரு சுவாரசியமான ஒற்றுமையாக குறிப்பிட்டார். பிரதமரின் உரையை தொடர்ந்து, அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான "ஸ்பீக்கர் ஆஃப் தி கினசெட் மெடல்" வழங்கப்பட்டது.

Advertisement