Loading...
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்: எந்த பொருட்களின் விலைகள் குறையும்?
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்

இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்: எந்த பொருட்களின் விலைகள் குறையும்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
10:42 am

செய்தி முன்னோட்டம்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தங்களுக்கு பிறகு, உலகின் முன்னணி வளர்ந்த பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டுடன் இந்தியா செய்த மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை இதுவாகும்.

தாக்கம்

இந்தியாவில் எவற்றின் விலை குறையும்?

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின் மீதான 150% இறக்குமதி வரி, உடனடியாக 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது படிப்படியாக 40சதவீதமாகக் குறைக்கப்படும்.

இதனால் பிரீமியம் ரக விஸ்கிகளின் விலை 5-10% வரை குறைய வாய்ப்புள்ளது.

ஆஸ்டன் மார்ட்டின், பென்ட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர், மெக்லாரன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பிரிட்டன் தயாரிப்பு சொகுசு கார்கள் மீதான இறக்குமதி வரி தற்போதுள்ள 110%லிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.

முதலாண்டில் 20,000 பெட்ரோல்/டீசல் கார்களுக்கு மட்டும் இந்த வரிச்சலுகை பொருந்தும்.

உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்க, EV மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த வரிச்சலுகை கிடையாது.

ஏற்றுமதி

இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் அசுர பலம்

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிடம் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீதப் பொருட்களுக்கு (மதிப்பின் அடிப்படையில்) பூஜ்ஜிய வரி வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டனுக்கு 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. வரி நீக்கத்தால் வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளை விட இந்திய ஆடைகளின் சந்தை வாய்ப்பு அதிகரிக்கும்.

காலணிகள், தோல் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கடல் உணவுகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறைகள் இந்த வரிவிலக்கினால் பெருமளவில் பயனடையும்.

ADVERTISEMENT

ஐடி

ஐடி நிறுவனங்களுக்கு நிம்மதி

இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக 'இரட்டை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புத் தவிர்ப்பு' கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரிட்டனுக்கு தற்காலிகமாக (5 ஆண்டுகள் வரை) பணி நிமித்தமாக செல்லும் இந்திய ஐடி பணியாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள், இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு நிதியை செலுத்த வேண்டியதில்லை.

இந்தியாவில் மட்டும் செலுத்தினால் போதுமானது.

இது இந்திய ஐடி நிறுவனங்களின் இயக்க செலவை கணிசமாக குறைக்கும்.

2025ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஒட்டுமொத்த இறக்குமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 1.6% என்ற அளவில் மட்டுமே இருந்தது.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம், இந்தியப் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையை விரிவுபடுத்துவதுடன் இரு நாட்டு வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

ADVERTISEMENT