LOADING...
இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி: AI, சைபர் செக்யூரிட்டி முதல் ராணுவ வியூகம் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்படுகிறார்

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி: AI, சைபர் செக்யூரிட்டி முதல் ராணுவ வியூகம் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்து

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
08:50 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒன்பது ஆண்டுகளில் இது அவரது இரண்டாவது இஸ்ரேல் பயணமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'மூலோபாய கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் இந்த பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இன்று இஸ்ரேல் சென்றடையும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றமான கினெசெட்டில் உரையாற்றுகிறார். இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் இவரே ஆவார். தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஒத்துழைப்பு

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுடனான இந்தியாவின் ராணுவ மோதலின் போது, இஸ்ரேலிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன. அந்த ஆயுத இருப்புகளை ஈடுகட்டவும், எதிர்கால தேவைகளுக்காக நவீன ராணுவ தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. றிப்பாக, இந்தியாவின் 'சுதர்சன் சக்ரா' வான் பாதுகாப்பு அமைப்பில் இஸ்ரேலின் 'Iron Dome' தொழில்நுட்பத்தை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

மற்றவை

இதர முக்கிய அம்சங்கள்

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA): இந்தியா - இஸ்ரேல் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த FTA குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. Hexagon கூட்டணி: இந்தியா, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிராந்தியக் கூட்டணியை உருவாக்க நெதன்யாகு முன்வைத்துள்ள திட்டத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ஆலோசிக்கப்படும். பாலஸ்தீன நிலைப்பாடு: இஸ்ரேலுடனான நெருங்கிய உறவுக்கு மத்தியிலும், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் 'இரு நாடு தீர்வு' (Two-state solution) கொள்கையை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருகை இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement