LOADING...
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவின் இந்திய வேர்கள்: மேடையில் OCI கார்டை காட்டிய ஐரோப்பிய தலைவர்
மேடையில் OCI கார்டை காட்டிய ஐரோப்பிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவின் இந்திய வேர்கள்: மேடையில் OCI கார்டை காட்டிய ஐரோப்பிய தலைவர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
03:48 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வர்த்தக ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, தனது பாக்கெட்டில் இருந்து 'இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடியுரிமை'(OCI) கார்டை எடுத்து மேடையில் காட்டி, "நானும் ஒரு இந்தியக் குடிமகன் தான்" என்று பெருமையுடன் கூறினார். அன்டோனியோ கோஸ்டாவின் தந்தை ஆர்லாண்டோ கோஸ்டா, கோவாவின் மார்கோவோ பகுதியில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதில் அவர் போர்ச்சுகல் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். கோஸ்டாவின் தாத்தா வாழ்ந்த பூர்வீக வீடு இன்றும் கோவாவின் மார்கோவோவில் உள்ளது. அங்கு அவரது உறவினர்கள் இன்றும் வசித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

'லிஸ்பனின் காந்தி' அன்டோனியோ கோஸ்டா

அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் இவரது பாணியால், இவர் 'லிஸ்பனின் காந்தி' என்றும் அழைக்கப்படுகிறார். 2017-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்திருந்த போது, பிரதமர் மோடி இவருக்கு இந்த OCI கார்டை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் இந்தியாவிற்குமான பிணைப்பு மிகவும் ஆழமானது. எனது தந்தையின் தேசமான கோவாவின் வேர்களைப் பற்றி நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் உச்சிமாநாட்டில் பேசினார். ஐரோப்பா மற்றும் இந்தியா இடையிலான இந்த வர்த்தக உறவு வெறும் பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல, அது தனது தனிப்பட்ட உறவின் ஒரு பகுதி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement