பங்குச் சந்தை: செய்தி

14 Mar 2024

பேடிஎம்

மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.

சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு

புதன்கிழமை, மார்ச் 13, 2024 அன்று பங்குச் சந்தை கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

19 Feb 2024

நிஃப்டி

இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50 

இன்றைய அமர்வில் நிஃப்டி 50, வரலாறு காணாத அளவு 22,150.75ஐ எட்டியுள்ளது.

01 Jan 2024

வணிகம்

இந்தாண்டு இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்கள்

கடந்த 2023ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 57 நிறுவங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் புதிய பங்குகளை வெளியிட்டிருக்கின்றன. இந்த புதிய பங்குகள் வெளியீடு மூலம், அந்நிறுவனங்கள் இணைந்து மொத்தமாக ரூ.49,437 கோடி நிதியைத் திரட்டியிருக்கின்றன.

"வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில்

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின்(டிஜிஜிஐ) நோட்டீஸிற்கு வியாழக்கிழமை பதிலளித்துள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, விநியோ கட்டணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள்

வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பல்வேறு நிதி சார்ந்த முக்கிய நடவடிக்கைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகளை ஏற்கனவே அந்தந்த துறைகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

09 Dec 2023

வணிகம்

அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களாகியிருக்கிறார்கள் ஸெரோதா (Zerodha) பங்கு வர்த்தக ஸ்டார்ப்அப் நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத்.

04 Dec 2023

அதானி

ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.

04 Dec 2023

வணிகம்

மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

28 Nov 2023

அதானி

பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்

அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

25 Nov 2023

முதலீடு

ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே

உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபட்டின் பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவனம், தன்னிடமிருந்த இந்தியாவேச் சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனின் அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியிருக்கிறது.

07 Nov 2023

வணிகம்

'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீவொர்க் (WeWork) நிறுவனமானது நியூ ஜெர்ஸி ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுசீரமைப்பு திவால் கோரி பதிவு செய்திருக்கிறது.

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.. 16 பில்லியன்கள் வரை குறைந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா. அந்த முடிவுகளானது முதலீட்டாளர்களின் எதிர்பார்த்த அளவில் இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

28 Sep 2023

முதலீடு

பங்குச் சந்தை முதலீடு மூலம் ரூ.10 கோடிக்கு அதிபதியான எளிய மனிதர் 

பங்குச்சந்தை மற்றும் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்கள் கண்டிப்பாக காம்பவுண்டிங்கைப் (Compounding) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY

தேசிய பங்குச் சந்தையின்(NSE) முதன்மைக் குறியீடான NIFTY, முதல்முறையாக 20,000 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்துள்ளது.

09 Sep 2023

இந்தியா

3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை

எப்போதும் இல்லாத வகையில் மிக அதிக மதிப்பை அடைந்திருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. தற்போது 3.8 ட்ரில்லியன் சந்தையாக உருவெடுத்திருக்கிறது இந்தியா. இது 2020ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட சரிவின் போது இருந்த மதிப்பை விட மும்மடங்கு அதிகமாகும்.

09 Aug 2023

வணிகம்

அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்?

அதானி குழும வணிக நிறுவனங்களுள் ஒன்றான அதானி வில்மரின் 44% பங்குகளை சில மாதங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை அக்குழுமம் ஆய்வு செய்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

19 Jun 2023

வணிகம்

ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி

இந்திய பங்குச்சந்தையில் இன்று முக்கிய அளவுகோல் குறியீடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று காலையிலேயே உயர்வைச் சந்தித்தது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள்.

பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு!

இந்தியாவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் மிக அதிக விலையைக் கொண்ட பங்காக இருந்து வருகிறது எம்ஆர்எஃப் (MRF) நிறுவனப் பங்கு.

பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்!

இந்த வருடம் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ரெட்டிட் நிறுவனம்.

உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த டிசம்பர் மாதம் எலான் மஸ்க்கை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் லக்சரி ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் வுட்டானின் நிறுவனர் பெர்னார்டு அர்னால்ட்.

21 May 2023

முதலீடு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).

25 Apr 2023

பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்? 

தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடவிருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 

தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை கடந்த 22-ம் தேதி அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி. சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, அதை விட சிறப்பான முடிவுகளை பதிவுசெய்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

22 Apr 2023

ஐபிஓ

IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா!

மேன்கைண்டு பார்மா (Mankind Pharma) நிறுவனமானது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து நேற்று தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம்.

நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்! 

ஐசிஐசிஐ குழும நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து இன்று அதன் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

20 Apr 2023

இந்தியா

புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்!

மும்பை பங்குச் சந்தையில் ஐடிசியின் பங்குகள், இன்று அதன் பங்கு வரலாற்றிலேயே முதன் முறையாக 400 ரூபாயைக் கடந்து வர்த்தகமானது.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனம் நாளை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா? 

அவலான் டெக்னாலஜிஸ் (Avalon Technologies) நிறுவனப் பங்குகள் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கிற்கு ரூ.415 - ரூ.436 என்ற விலையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 

கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.

பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ் 

பங்குச்சந்தை: கடந்த வியாழக்கிழமை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம்.

காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்! 

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம், நேற்று தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. நேற்று பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவிற்கு பிறகு தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவித்தது இன்ஃபோசிஸ்.

காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்! 

இந்தியாவின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது.

12 Apr 2023

முதலீடு

அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி! 

ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து நிலையிலாத் தன்மையுடனேயே இருக்கின்றன அதானி குழுமப் பங்குகள். மற்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தங்களுடைய முதலீடுகளைக் குறைத்து வரும் நிலையில், எல்ஐசி நிறுவனம் மட்டும் மேலும் மேலும் முதலீடு செய்து வருகிறது.

அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன?

அமெரிக்கா ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமம் ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது.

03 Feb 2023

இந்தியா

அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பங்குசந்தை "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன" என்றும், கெளதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் இன்று(பிப் 3) கூறினார்.

30 Jan 2023

இந்தியா

அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC), அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை இன்று(ஜன 30) வெளியிட்டிருக்கிறது.