விஜய்க்கு அடுத்தடுத்த சோதனைகள்! நின்றே போனதா ஜனநாயகன் ஓடிடி டீல்? ₹120 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்த அமேசான் பிரைம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படம் என்று கருதப்படும் ஜனநாயகன் படத்தின் மூலம் ஒருபுறம் தொழில்முறை நெருக்கடிகளையும், மறுபுறம் தனிப்பட்ட வாழ்வின் சோதனைகளையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கை வாரியத்தில் எதிர்கொண்டுள்ள சிக்கலால் தற்போது காலவரையறையின்றி தள்ளிப்போயுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜனநாயகன் படத்தின் திரையரங்கிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஓடிடி உரிமையை சுமார் ₹120 கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்தத் தெளிவும் இல்லாததாலும், தணிக்கை குழுவின் இழுபறியாலும் அந்த நிறுவனம் தற்போது இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது படத் தயாரிப்பாளர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
விஜய்யின் ‘ஜனநாயகன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரத்து செய்த அமேசான் நிறுவனம்#Amazon #jananayagan #OTTRelease #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/dEHJJvucuL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 12, 2026
சோதனைகள்
அடுத்தடுத்த சோதனைகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே ஜனநாயகன் வெளியாகும் என்று கூறப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் வணிகம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திரைப்பட சிக்கல் ஒருபுறம் இருக்க விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய புயல் கிளம்பியுள்ளது. 27 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பிறகு, விஜயின் மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதுதான் இதற்கு காரணம். குறிப்பாக, சங்கீதா தனது மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் உள்ள தொடர்பு குறித்து கூறியது, அரசியலிலும் அவருக்கு ஒரு பின்னடைவைக் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
திரைப்படம்
படம் குறித்த விபரங்கள்
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு ஹிட் படமான 'பகவந்த் கேசரி'யின் தழுவல் எனக் கூறப்படுகிறது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். தணிக்கை குழுவின் அனுமதி கிடைத்து, படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே, ஓடிடி நிறுவனங்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் எனத் தெரிகிறது. அதுவரை ஜன நாயகன் படத்தின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.