ஏர் இந்தியா: செய்தி
வன்முறைக்கு துணைபோகும் காலிஸ்தான் தீவிரவாதம்: கனடா உளவுத்துறை கடும் எச்சரிக்கை!
கனடா நாட்டின் உளவுத்துறை (CSIS) வெளியிட்டுள்ள சமீபத்திய பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?
அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
விமானக் கட்டண உயர்வால் ரயில்களுக்கு மாறிய பயணிகள்; இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மந்தநிலை
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி, கொரோனா காலத்திற்கு பிந்தைய மீட்சிக்குப் பிறகு, 2026 நிதியாண்டில்(FY26) மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
'செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்': மத்திய அரசின் உடனடித் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் காரணமாக, தங்களது செயல்பாடுகள் நிறுத்தப்படக்கூடும் என எச்சரித்து, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
சர்வதேச வழித்தடங்களில் 4 நாள் சிறப்பு விற்பனையை ஏர் இந்தியா அறிவித்துள்ளது: சலுகைகளைப் பாருங்கள்
ஏர் இந்தியா, சர்வதேச விமானப் பயணங்களுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால கோடைக்கால விற்பனையைத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்
துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடி உயர்வு! வெளிநாடு செல்வோருக்கு ரூ. 26,000 வரை கூடுதல் சுமை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ஏர் இந்தியா இஸ்ரேல் விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தியுள்ளது, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளது.
'கடுமையான காலம் வரவிருக்கிறது': அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் டாடா சன்ஸ் தலைவர் எச்சரிக்கை
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், டாடா குழுமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை, மேலும் சவாலான வணிக சூழலுக்கு தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் உயர்ந்த விமான எரிபொருள் விலை; ஏப்ரல் முதல் விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு
ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு, தற்போது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை நேரடியாகப் பாதித்துள்ளது.
ஏப்ரல் 20 முதல் 60% விமான இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்
ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை இலவசமாக ஒதுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
50% விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது சமீபத்திய அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா, ஐரோப்பாவிற்கு கூடுதலாக 36 விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா, மார்ச் 19 முதல் மார்ச் 28, 2026 வரை 36 சர்வதேச விமான சேவைகளை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள் மோசடி: இலவச டிக்கெட்டுகளை அந்நியர்களுக்கு விற்ற விவகாரம்!
ஏர் இந்தியா நிறுவனத்தின் 'பணியாளர் பயணக் கொள்கையை' (Employee Leisure Travel Policy) சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தியது அந்நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானக் கட்டணங்களை உயர்த்தும் ஏர் இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக விமானக் கட்டணங்களின் விலை உயரலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் விமான கட்டண உயர்வை தற்போது அமல்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
விமான பயணிகளுக்காக..தொலைந்து போன உங்கள் லக்கேஜ்களை கண்டுபிடிப்பதை எளிதாக்கும் Android
ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் தொலைந்த லக்கேஜ்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் கூகிள் ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ₹1 கோடி அபராதம்: அனுமதி இன்றி 8 முறை விமானத்தை இயக்கியதாக டிஜிசிஏ அதிரடி
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான தகுதிச் சான்றிதழ் இன்றி, ஒரு ஏர்பஸ் விமானத்தை எட்டு முறை இயக்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
DGCAவின் கேபின் பணியாளர் சோர்வு விதிகளை எதிர்க்கும் விமான நிறுவனங்கள்; ஏன்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா , கேபின் பணியாளர்களுக்கான முன்மொழியப்பட்ட சோர்வு மேலாண்மை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இண்டிகோ விமான சேவையில் குளறுபடி: டிசம்பரில் மட்டும் 16 லட்சம் பயணிகள் அவதி, ₹22.7 கோடி நஷ்டஈடு
கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தின் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதில், சுமார் 16.2 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்ததாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தெரிவித்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களின் 377 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாம்; ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களும் அடங்கும்
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
நடுவானில் ஏற்பட்ட பீதி; அனைத்து போயிங் 787 விமானங்களின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யும் ஏர் இந்தியா
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் முழு தொகுப்பிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை ஏர் இந்தியா ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
விமான விபத்தால் நிலைகுலைந்த ஏர் இந்தியா! ரூ.15,000 கோடி நஷ்டம்! மீண்டு வருமா?
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா CEO கேம்பல் வில்சன் விரைவில் மாற்றப்படலாம் எனத்தகவல்
ஏர் இந்தியாவில் தலைமை மாற்றத்தை டாடா சன்ஸ் பரிசீலித்து வருவதாகவும், கேம்பல் வில்சனின் பதவி மறுபரிசீலனைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் முதல் ஏர் இந்தியா வரை: 2025 ஆம் ஆண்டின் விபத்துகள்
2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது, பல முக்கிய சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தன.
இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?
விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.
ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் தாமதம்: அமெரிக்க வழக்கறிஞர் புகார்
ஏர் இந்தியா AI171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், தாமதமான இழப்பீடு மற்றும் உளவியல் அதிர்ச்சி குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்
நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது.
பாதுகாப்பு சான்றிதழ் இன்றி வானில் பறந்த ஏர் இந்தியா விமானம்;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் முழுவதும், கட்டாய பாதுகாப்பு சான்றிதழான 'Airworthiness Review Certificate - ARC' இல்லாமலேயே பலமுறை இயக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.