விமான சேவைகள்: செய்தி
இந்திய விமானப் பயணத்தில் புதிய சகாப்தத்தை படைக்க வந்துவிட்டது இண்டிகோவின் A321 XLR விமானம்
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாட்டின் முதல் ஏர்பஸ் A321 XLR விமானத்தின் வருகையுடன் அதன் விமான விரிவாக்க பயணத்தில் ஒரு பெரிய படியை எடுத்துள்ளது.
விமானங்களில் பவர் பேங்க்குளை பயன்படுத்துவதை DGCA ஏன் தடை செய்துள்ளது?
இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), விமானங்களில் சார்ஜ் செய்வதற்கு பவர் பேங்க்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
இண்டிகோ விமானிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு: புதிய கொடுப்பனவுகளை அறிவித்த நிர்வாகம்
இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, தனது விமானிகளுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை(Allowances) உயர்த்தி அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 'ரெட் அலர்ட்': கடும் பனிமூட்டத்தால் 128 விமானங்கள் ரத்து
வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் அலை காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ பயணிகள் பலர் தங்கள் பாகேஜ்கள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்
இண்டிகோவில் பயணித்த பயணிகள், தங்கள் பயண அனுபவத்தை மேலும் சிக்கலாக்கியதால், சமூக ஊடகங்களில் பாகேஜ்கள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.
டெல்லியில் மீண்டும் 'Severe' நிலையை எட்டிய காற்று மாசுபாடு: கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் கூடிய நச்சுப் புகை சூழ்ந்ததால், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'கடுமையான' பிரிவை எட்டியுள்ளது.
இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!
வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து இரண்டாம் நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ சவாலான கட்டத்திலிருந்து மீண்டு விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்
இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், விமான நிறுவனம் ஒரு சவாலான கட்டத்திலிருந்து வலுவாக மீண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?
விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.
இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
விமான சேவை இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ₹10,000 பயண வவுச்சர்: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
விமான சேவைகளில் ஏற்பட்ட திடீர் இடையூறுகள் காரணமாகத் தவித்த பயணிகளுக்கு இழப்பீடாக ₹10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்குவதாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ அறிவித்துள்ளது.
இண்டிகோ சர்ச்சை எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி சேவைகளில் 100 விமானங்களை அதிகரித்துள்ளது
தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகிறது, புதன்கிழமை 70க்கும் மேற்பட்ட புதிய ரத்துகள் செய்யப்பட்டன.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோவின் குளிர்கால விமான வழித்தடங்களை குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு
இண்டிகோவின் குளிர்கால விமான அட்டவணையை குறைத்து, அதன் இடங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கிடையில் மறுபகிர்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்; பயணிகளுக்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை
தொடர்ச்சியாக நான்காவது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணக் கட்டணம் ரத்து மற்றும் மறு அட்டவணைக்கான கட்டணத்தில் முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
விமானக் கட்டணத்திற்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்; சந்தர்ப்பவாத விலை குறித்து விமான நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான டிக்கெட்டுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.
இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடரும் குளறுபடியால் பயணிகள் அவதி
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவில் நிலவும் நெருக்கடி சனிக்கிழமை (டிசம்பர் 6) நான்காவது நாளாக நீடித்தது.
இண்டிகோ கோளாறு: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி
இண்டிகோ விமான நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு உறுதியளித்துள்ளார்.
விமானங்கள் ரத்தால் அவதி: பயணிகளின் கூட்டத்தைக் கையாள 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளைச் சேர்த்த ரயில்வே
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ரயில் பயணிகளின் தேவை அதிகரித்துள்ளது.
கண்காணிப்புக்காக 24X7 கட்டுப்பாட்டு அறையை அமைத்த அமைச்சகம்; அனைத்து விமான செயல்பாடுகளும் நள்ளிரவில் சீராகக்கூடும்
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அனைத்து விமான அட்டவணைகளும் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் முழு சேவைகளும் நிலைத்தன்மையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானச் சேவை குழப்பம்: பணம் திரும்ப பெறுவது எப்படி? பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்!
விமானிகளின் கடமை நேர வரம்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களால், இண்டிகோ கடந்த சில நாட்களாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்து, நாடு முழுவதும் பெரும் நிதி மற்றும் பயணக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து; சென்னையிலும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கிறது.
குழப்பத்தில் இண்டிகோ விமானச் சேவை: ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 விமானங்கள் ரத்து
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயல்பாட்டு குறைபாடுகள் காரணமாக, நேற்று (டிசம்பர் 4) மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை: டெல்லி, மும்பை, பெங்களூருவில் பெரும் குழப்பம்
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவில் ஏற்பட்ட தொடர் செயல்பாட்டு குழப்பங்களால், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ; என்ன காரணம்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இந்தாண்டு நவம்பர் மாதம் அதன் செயல்பாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, கடுமையான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்
நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது.
பாதுகாப்பு சான்றிதழ் இன்றி வானில் பறந்த ஏர் இந்தியா விமானம்;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் முழுவதும், கட்டாய பாதுகாப்பு சான்றிதழான 'Airworthiness Review Certificate - ARC' இல்லாமலேயே பலமுறை இயக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு
ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பயணிகளே, இனி அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கப்படும்!
துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமானத்திற்குள் இணைய சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்கள் தாமதம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGIA) விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை விமான நடவடிக்கைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!
விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.