LOADING...
மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை: டெல்லி, மும்பை, பெங்களூருவில் பெரும் குழப்பம்
முக்கிய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது

மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை: டெல்லி, மும்பை, பெங்களூருவில் பெரும் குழப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 04, 2025
06:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவில் ஏற்பட்ட தொடர் செயல்பாட்டு குழப்பங்களால், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சேவை இடையூறு மூன்றாவது நாளாக தொடர்வது கூடுதல் அவலம். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் 95, மும்பையில் 85, பெங்களூருவில் 73 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பலரும் தங்கள் கருத்துகளை கோபத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நடவடிக்கை

ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கை

இந்த திடீர் குழப்பம் குறித்து விசாரிப்பதற்காக, DGCA இண்டிகோ அதிகாரிகளை அவசரமாக வரவழைத்துள்ளதுடன், விரிவான விசாரணையையும் தொடங்கியுள்ளது. இந்த குழப்பம் குறித்து இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியதோடு, எதிர்பாராத "செயல்பாட்டு சவால்கள்", தொழில்நுட்ப கோளாறுகள், குளிர்கால அட்டவணை மாற்றங்கள் மற்றும் புதிய விமான பணியாளர்கள் பணி நேரம் தொடர்பான விதிகள் அமலாக்கம் ஆகியவற்றை காரணமாக கூறியுள்ளது. இண்டிகோவின் விளக்கத்தை இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. புதிய பணி நேர விதிகள் அமலுக்கு வருவது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தும், விமான நிறுவனம் வேண்டுமென்றே குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும் கொள்கையைக் கடைப்பிடித்ததும், புதிய பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைத்ததும் தான் குழப்பத்திற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement