LOADING...
ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ; என்ன காரணம்?
ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ

ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 04, 2025
09:26 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இந்தாண்டு நவம்பர் மாதம் அதன் செயல்பாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, கடுமையான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் இண்டிகோ நிறுவனம் மொத்தம் 1,232 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானங்களின் நேரத்தைக் கடைப்பிடிக்கும் செயல்திறன் வெகுவாக குறைந்ததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த செயல்திறன் குறைவு மற்றும் அதிக ரத்து குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாக இண்டிகோவிடம் விளக்கம் கேட்டுள்ளது. விமானச் சேவைகளில் ஏற்படும் ரத்து மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இண்டிகோவுடன் இணைந்து மதிப்பீடு செய்து வருவதாக DGCA தெரிவித்துள்ளது.

விளக்கம்

ரத்துக்கான முக்கியக் காரணங்களாக இண்டிகோ கூறுவது

பயணிகளிடம் வருத்தம் தெரிவித்த இண்டிகோ நிறுவனம், செயல்பாட்டில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பின்வரும் காரணங்களைக் கூறியுள்ளது: 1. பணியாளர் பற்றாக்குறை: ரத்தான 1,232 விமானங்களில், 755 விமானங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2. வானிலை மற்றும் நெரிசல்: மோசமான வானிலை, விமானப் போக்குவரத்து அமைப்பில் அதிகரித்த நெரிசல் மற்றும் விமான நிலையக் கட்டுப்பாடுகள். 3. தொழில்நுட்பப் பிரச்சினைகள்: சிறிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகள். 4. சட்டம்: விமானப் பணியாளர்களின் பணி நேர வரம்பு விதிகள் (Flight Duty Time Limitations - FDTL) தொடர்பான புதிய சட்ட நடைமுறைகள். சமீபத்தில், இந்தக் காரணங்களால் டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஒரே நாளில் மட்டும் 85 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement