LOADING...
கற்றலை எளிமையாக்கும் வகையில் கிளாடு சாட்பாட் இனி இன்டராக்டிவ் விசுவல்களையும் உருவாக்கும்
ஆந்த்ரோபிக் கிளாடு சாட்பாட்

கற்றலை எளிமையாக்கும் வகையில் கிளாடு சாட்பாட் இனி இன்டராக்டிவ் விசுவல்களையும் உருவாக்கும்

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
11:10 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் தற்போது சாட்பாட்களாக மட்டும் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது கிளாடு (Claude) சாட்பாட்டில் புதிய அம்சத்துடன் மேம்படுத்தியிருக்கிறது. தங்களது செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் பயனர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 'இன்டராக்டிவ் விஷுவல்ஸ்' மூலம் பதிலளிக்கும் அம்சத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட 'இமேஜின் வித் கிளாட்' (Imagine with Claude) வசதியின் விரிவாக்கமாக இது அமைந்துள்ளது.

ஏஐ

இதனாலான பயன்கள் என்ன?

மேலே கூறியது போல நாம் கேட்கும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு எழுத்து வடிவில் பதிலளிப்பதுடன், அதற்கான விளக்கப்படத்தையும், அத்துடன் நாம் இன்டராக்ட் செய்யும் வகையிலான வசதியையும் கிளாடு சாட்பாட் வழங்குகிறது. தரவுகளைக் கொண்டு வருவாய் வரைபடங்களை உருவாக்குவது, சிக்கலான அறிவியல் கருத்துக்களை விளக்குவது போன்றவற்றுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் இலவசப் பயனர்கள் உட்பட அனைவருக்கும் தற்போது 'பீட்டா' பதிப்பில் வழங்கப்படுகிறது. பயனர்கள் "visualize how this might change over time" என்பது போன்ற கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

Advertisement