உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- திண்டுக்கல்: ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் மற்றும் காசிபாளையம் ஆகிய பகுதிகள், லட்சுமணம்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சுக்கம்பட்டி மற்றும் லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாமக்கல்: கபிலர்மலை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சாபாளையம், சேலூர்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம் மற்றும் பெரியசோளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும். பல்லடம்: பொங்கலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர் மற்றும் ஜி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும். தஞ்சாவூர்: கரம்பயம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கரம்பயம், ஆலத்தூர் மற்றும் பாப்பநாடு ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.