LOADING...
குழப்பத்தில் இண்டிகோ விமானச் சேவை: ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 விமானங்கள் ரத்து
ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 இண்டிகோ விமானங்கள் ரத்து

குழப்பத்தில் இண்டிகோ விமானச் சேவை: ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 விமானங்கள் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2025
08:57 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயல்பாட்டு குறைபாடுகள் காரணமாக, நேற்று (டிசம்பர் 4) மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புது டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் குறைந்தது 191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவியது. இந்த அதிருப்தி குறித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டு, "இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காரணங்கள்

DGCA விசாரணையில் இண்டிகோ நிறுவனம் தெரிவித்த காரணங்கள்

இந்த மிகப் பெரிய இடையூறுக்கான காரணங்களாக நிறுவனம் கூறியுள்ளவை: 1. சிறிய தொழில்நுட்ப கோளாறுகள் (minor technology glitches). 2. விமான அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்கள் (schedule changes). 3. மோசமான வானிலை (adverse weather conditions). 4. விமானப் போக்குவரத்துச் சூழலில் அதிகரித்த நெரிசல் (heightened congestion). 5. பறக்கும் பணியாளர்கள் தொடர்பான விதிமுறைகளை (FDTL norms) அமல்படுத்தியது. இந்தச் சவால்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, செயல்பாடுகளில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement