நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். செக்-இன் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா மட்டுமின்றி மற்றும் பிற விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன. காரணம்: இந்த இடையூறுக்கு ஒரு "Third-Party System" பாதிக்கப்பட்டதே காரணம் என்று ஏர் இந்தியா தெரிவித்தது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே செக்-இன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, விமானப் புறப்பாடு தாமதமானது.
தற்போதைய நிலை
கோளாறு சீரமைக்கப்பட்டு செயல்பாடுகள் இயக்கம்
ஏர் இந்தியா நிறுவனம் விடுத்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட "வெளிநிறுவனத்தின் தகவல் அமைப்பு" முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது. செக்-இன் செயல்பாடுகள் தற்போது சாதாரணமாக இயங்கி வருகின்றன. அனைத்து விமானச் சேவைகளும் அட்டவணைப்படி இயங்கி வருவதாகவும் ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் தங்கள் விமானங்களின் நிலையைச் சரிபார்த்து, வழக்கத்தைவிட முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வருமாறு ஏர் இந்தியா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது.