LOADING...
இண்டிகோ விமானிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு: புதிய கொடுப்பனவுகளை அறிவித்த நிர்வாகம்
விமானிகளுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை உயர்த்தி அறிவித்துள்ளது IndiGo

இண்டிகோ விமானிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு: புதிய கொடுப்பனவுகளை அறிவித்த நிர்வாகம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 30, 2025
09:48 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, தனது விமானிகளுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை(Allowances) உயர்த்தி அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்கவும், விமானிகளை தக்கவைத்து கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கொடுப்பனவு உயர்வு விமான கடமை நேர வரம்புகள்(FDTL) விதிமுறைகளுடன் இணைக்கப்படவில்லை என்று டைம்ஸ் நவ் வட்டாரங்கள் தெரிவித்தன. உள்நாட்டு லேஓவர், டெட்ஹெட் மற்றும் நைட் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவு வகைகளுக்கு இந்த உயர்வுகள் இருக்கும். மேலும், விமானிகள் டெயில்-ஸ்வாப் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள். இரவு நேர நடவடிக்கைகளுக்கு அதிக விமானிகளை ஈடுபடுத்த வேண்டிய புதிய விதிமுறைகளின் பின்னணியில் இந்த கொடுப்பனவு உயர்வு வந்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

விவரங்கள்

அறிவிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் விவரங்கள்

1. உள்நாட்டுத் தங்குமிடப் படி (Domestic Layover Allowance): தங்கள் பணியிடத்தைத் தாண்டி மற்ற நகரங்களில் தங்கும் விமானிகளுக்கான படி உயர்த்தப்பட்டுள்ளது: கேப்டன்கள்: 10 முதல் 24 மணி நேரத் தங்கலுக்கு இனி ₹3,000 வழங்கப்படும் (முன்பு ₹2,000). 24 மணி நேரத்திற்கு மேல் தங்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹150 வழங்கப்படும். முதல் அதிகாரிகள்: இனி ₹1,500 வழங்கப்படும் (முன்பு ₹1,000). 24 மணி நேரத்திற்கு மேல் தங்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹75 வழங்கப்படும். 2. இரவு நேரப் படி (Night Allowance) பழைய முறையை நீக்கிவிட்டு, நிலையான (Fixed) மணிநேரப் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: கேப்டன்கள்: ஒரு மணி நேரத்திற்கு ₹2,000. முதல் அதிகாரிகள்: ஒரு மணி நேரத்திற்கு ₹1,000.

உணவு 

உணவு மற்றும் போக்குவரத்துக்கான கொடுப்பனவும் உயர்த்தப்பட்டுள்ளது

3. 'டெட்ஹெட்' படி (Deadhead Allowance) பணி நிமித்தமாகப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் விமானிகளுக்கு (Deadheading) வழங்கப்படும் படி: கேப்டன்கள்: ஒரு மணி நேரத்திற்கு ₹4,000. முதல் அதிகாரிகள்: ஒரு மணி நேரத்திற்கு ₹2,000. 4. டெயில்-ஸ்வாப் படி (Tail Swap Allowance) திட்டமிடப்பட்ட விமானத்திற்குப் பதிலாக வேறு விமானத்தை இயக்கும்போது வழங்கப்படும் புதிய படி: கேப்டன்கள்: ஒவ்வொரு முறை மாற்றும்போதும் ₹1,500. முதல் அதிகாரிகள்: ஒவ்வொரு முறை மாற்றும்போதும் ₹750. 5. போக்குவரத்து மற்றும் உணவுப் படி (Transit & Meal Allowance) 90 நிமிடங்களுக்கு மேலான காத்திருப்பிற்கு, கேப்டன்களுக்கு மணிநேரத்திற்கு ₹1,000-மும், முதல் அதிகாரிகளுக்கு ₹500-மும் வழங்கப்படும். கேப்டன்களுக்கான உணவுப் படி ₹500-லிருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement