LOADING...
சீனாவிற்கு செக்; அமெரிக்காவின் பலமான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா; உலகை ஆளப்போகும் புதிய கூட்டணி
பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா

சீனாவிற்கு செக்; அமெரிக்காவின் பலமான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா; உலகை ஆளப்போகும் புதிய கூட்டணி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக, அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா மூலோபாயக் கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்துள்ளது. டிசம்பர் 2025 இல் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியின் நோக்கம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் செமிகண்டக்டர் விநியோக சங்கிலியைப் பாதுகாப்பதாகும். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று (வெள்ளிக்கிழமை) புதுடெல்லியில் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டில் கையெழுத்தாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நோக்கங்கள்

கூட்டணியின் முக்கிய நோக்கங்கள்

இந்த பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா பின்வரும் இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளன. சுயசார்பு விநியோகச் சங்கிலி: சிப் தயாரிப்பிற்குத் தேவையான கச்சா பொருட்கள் முதல் ஏஐ உள்கட்டமைப்பு வரை எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்தல். சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்தல்: உலகளாவிய சந்தையில் சீனாவின் அழுத்தத்திலிருந்து விடுபடவும், பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தக் கூட்டணி உதவும். முக்கிய தாதுக்கள் பாதுகாப்பு: ஏஐ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுக்களுக்கான விலைக் கட்டுப்பாட்டு முறையை உருவாக்கவும் இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உறுப்பினர்கள்

உறுப்பினராக உள்ள நாடுகள்

இந்தியாவுடன் இணைந்து ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், இஸ்ரேல், கிரீஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தக் கூட்டணியில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளன. நம்பகமான தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் உறுப்பு நாடுகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நாடுகளின் பொதுவான நோக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலங்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த சில கசப்பான சூழல்களைக் கடந்து, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை மீண்டும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜேக்கப் ஹெல்பெர்க் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement