Loading...
பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC
அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC

பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
09:47 am

செய்தி முன்னோட்டம்

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான ராணுவ மோதல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தென் ஈரானிய பகுதிகளில் அமெரிக்க படைகள் நடத்திய 5 மணி நேர வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவு மற்றும் விமானத் தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ இலக்குகளுக்கு எதிராகத் தங்களின் இரண்டாவது கட்டப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.

பழிவாங்கல்

ஈரானின் 'ஆபரேஷன் நஸ்ர் 2'

ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானத் தளம் மற்றும் அல் ஜுபைர் அமெரிக்க ராணுவத் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஷேக் ஈசா தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் கட்டுப்பாட்டு மையம், ஹெலிகாப்டர் பராமரிப்பு மையம் மற்றும் அதிநவீன P-8 ரக மின்னணுப் போர் விமானங்கள்நிறுத்தப்பட்டிருந்த விமானக் கூடம் உள்ளிட்டவை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

அல் ஜுபைர் தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் தங்கும் விடுதிகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவையும் தாக்கப்பட்டது.

இருப்பினும், இந்தத் சேதங்கள் குறித்துப் பஹ்ரைன் அரசோ அல்லது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை.

அமெரிக்கா

அமெரிக்காவின் 5 மணி நேர அதிரடித் தாக்குதல்

ஈரானின் இந்த தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்கா ஈரானிய நிலைகள் மீது தாக்குதலை நடத்தி முடித்திருந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், ஜூலை 13 இரவு (கிழக்கு நேரப்படி 10:15 மணி வரை) சுமார் 5 மணி நேரம் இந்தத் தாக்குதல் நீடித்தது.

புஷெஹ்ர், சாபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் குறி வைக்கப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கும் நோக்கில், அவர்களின் கடலோரப் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் தளங்கள் மற்றும் கடற்படைக் கட்டமைப்புகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT