LOADING...
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
காற்று மாசுபாடு காரணமாக, இன்று விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2025
11:20 am

செய்தி முன்னோட்டம்

தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் பார்வைத்திறன் 100 மீட்டருக்கும் குறைவாகக் குறைந்ததால், விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுவரை சுமார் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மிகக் குறைந்த பார்வைத்திறனிலும் விமானங்களை தரையிறக்க உதவும் 'CAT III' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், வானிலை சவாலாகவே உள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

விமான நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகள்

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் பயணிகளுக்காக அவசர கால ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன: பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படும் முன், தங்களின் விமான நிலையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்பைஸ்ஜெட்மோசமான வானிலையால் பாதிக்கப்படும் பயணிகள், கூடுதல் கட்டணமின்றி வேறு விமானத்திற்கு மாறிக் கொள்ளவோ அல்லது தங்களின் பயணச் சீட்டை ரத்து செய்து முழுப் பணத்தையும் (Full Refund) பெற்றுக்கொள்ளவோ ஏர் இந்தியா அனுமதி அளித்துள்ளது. விமான நிலையங்களில் சிக்கியுள்ள பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement