LOADING...
அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!
அடர் மூடுபனியால் வடமாநிலங்கள்களில் விமான போக்குவரத்து பாதிப்பு

அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து இரண்டாம் நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, வாரணாசி மற்றும் சண்டிகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாக உள்ளதால், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடர் மூடுபனி காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஓடுதளத்தில் பார்வைத்திறன் 50 முதல் 100 மீட்டருக்கும் குறைவாக இருந்ததால், பல விமானங்கள் தரை இறங்க முடியாமல் அருகில் உள்ள நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

அவசர நடவடிக்கைகள்

விமான நிறுவனங்களின் அவசர நடவடிக்கைகள்

ஏர் இந்தியா: பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக 'FogCare' என்ற சிறப்பு திட்டத்தை ஏர் இந்தியா அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதிக நேரம் தாமதமானாலோ, பயணிகள் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி வேறு தேதிக்கு டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம் அல்லது முழுத் தொகையையும் (Refund) திரும்பப் பெறலாம். இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட்: இண்டிகோ நிறுவனம் மட்டும் சுமார் 149 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால், பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்னரே தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement