LOADING...
22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி
இந்த மாத இறுதிக்குள் 22 இந்திய மொழிகளிலும் பாரத்ஜென் ஏஐ சேவை தொடக்கம்

22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
11:07 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் புவனேஸ்வர் கலிதாவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும், எதிர்காலத்தில் இன்னும் பல வட்டார மொழிகள் மற்றும் கிளை மொழிகள் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

வசதிகள்

தற்போதைய நிலை மற்றும் வசதிகள்

பாரத்ஜென் ஏஐ திட்டம் தற்போது 15 மொழிகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மொழிகள்: தமிழ், இந்தி, அசாமிய மொழி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மைதிலி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் ஏற்கனவே சேவைகள் உள்ளன. சேவைகள்: இந்த மாத இறுதிக்குள் 22 மொழிகளிலும் டெக்ஸ்ட் சேவைகள் கிடைக்கும். மேலும், இதில் 15 மொழிகளுக்கு ஸ்பீச் (பேச்சு) மற்றும் விஷன் (பார்வை) தொடர்பான வசதிகளும் மேம்படுத்தப்படும். கட்டமைப்பு: இந்தத் திட்டம் 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் (Technology Innovation Hubs) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலை நிர்ணயம்

தரவு பகிர்வு மற்றும் விலை நிர்ணயம்

இந்தியக் கண்டுபிடிப்பாளர்களுக்கு இந்த ஏஐ தரவுகள் (Data) பகிரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தரவுகள் பகிரப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், பாரத்ஜென் சேவைகளை இந்தியத் தொழில்முனைவோருக்குக் குறைந்த விலையில் வழங்குவது குறித்த ஆலோசனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. தனியார் துறையின் முதலீடுகளையும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

Advertisement

நோக்கம்

பாரத்ஜென் ஏஐயின் நோக்கம்

அக்டோபர் 2024 இல் தொடங்கப்பட்ட பாரத்ஜென், இந்திய மொழிகள் மற்றும் சமூகத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் அரசாங்க ஆதரவு தேசிய ஏஐ திட்டமாகும். இது பெரிய மொழி மாதிரிகள் (LLMs) மூலம் உரையாடல், உரையிலிருந்து பேச்சுக்கு மாற்றுதல் (Text-to-Speech) மற்றும் தானியங்கி பேச்சு அங்கீகாரம் போன்ற நவீன சேவைகளை வழங்கும். இது வெளிநாட்டு ஏஐ தளங்களுக்கு மாற்றாக, இந்தியாவின் சொந்தத் தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பான தளமாக இருக்கும்.

Advertisement