LOADING...
இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து; சென்னையிலும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து

இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து; சென்னையிலும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2025
11:56 am

செய்தி முன்னோட்டம்

இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கிறது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை ரத்து செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பம் தொடர்ந்து நீடிப்பதால் நள்ளிரவு வரை டெல்லியில் இருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் இன்று 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை

சென்னை உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களிலும் பாதிப்பு

டெல்லி தவிர நாட்டிலுள்ள மற்ற விமான நிலையங்களிலும் விமான சேவைகள் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குள், எந்த ஒரு இண்டிகோ பயணியையும் அனுமதிக்க வேண்டாம் என இண்டிகோ, சென்னை விமான நிலைய CISF-க்கு கடிதம் அனுப்பியுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூருவில் 102 விமானங்களும், மும்பையில் 104 விமானங்களும், ஹைதராபாத்தில் 92 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடந்து அவதிப்பட்டு வருகின்றனர். சரியான தகவல் தொடர்பு இல்லை என்றும், டிக்கெட்டுகளை ரத்து செய்த பிற விமான நிறுவனங்களின் கட்டணங்கள் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலைமை முற்றிலும் சீராக பிப்ரவரி 2026 ஆகும் என நிறுவனம் கூறியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement