ஆபரேஷன் சிந்தூர்: செய்தி

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

'ஆபரேஷன் சிந்தூர்'க்கு ட்ரேட்மார்க் கோரி விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்; என்ன காரணம்?

"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் "ஆபரேஷன் சிந்தூர்"-க்கான ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை முதன்முதலில் தாக்கல் செய்துள்ளது.

'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல் 

'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்

புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு

நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

08 May 2025

பஞ்சாப்

பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.

'ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது மத்திய அரசு

மத்திய அரசு வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அரசியல் தலைவர்களுக்கு விளக்குவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.

லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்

புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் எதிரொலியாக, விமான நிலையங்களிலும், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான்

இந்தியாவின் ராணுவத் தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ அடுத்து, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் மூடியுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது

இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சரிவு மற்றும் லாப முன்பதிவைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்தியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.

‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு

இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், இந்திய ராணுவமும், விமானப்படையும் துல்லியமாக ஈடுபட்டன.

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.

LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.

லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor

பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.