பாகிஸ்தான் ராணுவம்: செய்தி
பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றம் 'நாட்டுக்கு எதிரான' செயல்களுக்காக இம்ரான் கான் மற்றும் PTI-க்கு தடை விதித்தது
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்டமன்றம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) மீது தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கேள்வியின்போது, ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தியாவுடன் போரை ஆசிம் முனீர் விரும்புகிறார்': இம்ரான் கானின் சகோதரி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், ஜெனரல் அசிம் முனீர் இந்தியாவுடன் போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"உடல்நிலை நலமாக உள்ளார். எனினும்...": போராட்டத்திற்கு பின்னர் சிறையில் இம்ரான் கானை சந்தித்த அவரின் சகோதரி
இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமரை அடியாலா சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.
இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை
இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?
சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது
பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.
பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆழமடையும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் நட்பு: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.
ஆசிய கோப்பை: கோப்பையை பெற்றுக்கொள்ள பிசிசிஐயை மொஹ்சின் நக்வி வலியுறுத்தினார்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) சமீபத்திய கோரிக்கையை நிராகரித்துள்ளதால், ஆசிய கோப்பை பஞ்சாயத்து தொடர்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்; தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு
எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.
அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.
முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆதரவு மட்டுமே: அமெரிக்கா கொடுத்த ட்விஸ்ட்
பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது.
Trending: கிடைக்கிற கேப்-ல எல்லாம் பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் IAF இப்போ குடுத்தது செம ட்விஸ்ட்!
இந்திய விமானப்படை தினத்தன்று பரிமாறப்பட்ட மெனுவில் ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, போலாரி பனீர் மேத்தி மலாய் மற்றும் பாலகோட் டிராமிசு ஆகியவை இடம்பெற்றன.
பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது.
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு; 10 பேர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள எல்லைப்புற காவல் துறை (FC) தலைமையகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது.
PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது.
'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: டிரம்ப் புதிய கூற்று
மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தம் தாம் நடத்திய மத்தியஸ்த முயற்சியின் விளைவாகத்தான் நடந்தது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்திய தாக்குதல்களால் நிலைகுலைந்த பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என தகவல்
இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது பெரும் சேதத்தை சந்தித்த பின்னர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் ஆகஸ்ட் 22 வரை மூடப்பட்டிருக்கும்.
பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு "மாறாமல்" இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்.
'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.
பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் முக்கிய வெற்றிகளை பற்றி இந்திய விமானப்படைத் தளபதி விளக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய முக்கிய விவரங்களை விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 5 பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: IAF தலைவர்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களும் மற்றொரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்துக்களை வாங்கி பணத்தை மோசடி செய்கிறார்கள்!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாட்டின் உயர் அதிகாரிகள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யும் அமெரிக்கா- 1971ஆம் ஆண்டு நியூஸ் பேப்பர் ஆதாரத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம்
செவ்வாயன்று இந்திய ராணுவம் அமெரிக்காவை கிண்டல் செய்து, 1971ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய செய்தித்தாள் துணுக்கை வெளியிட்டது.
இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் கருத்து
எதிர்காலத்தில் இராணுவ மோதல்கள் ஏற்பட்டால், இந்தியாவிற்குள் ஆழமாகத் தாக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி; இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி லாகூரில் இயக்கம் தொடங்கியது PTI கட்சி
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி திடீரென லாகூரில் இருந்து அதன் இம்ரான் கானை விடுதலை செய்யும் இயக்கத்தை தொடங்கியது.