கடற்படை: செய்தி
98% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி! முப்படைகளுக்கும் ₹1.10 லட்சம் கோடியில் அதிநவீன ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், இந்திய முப்படைகளுக்காக சுமார் ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான தேவை ஏற்பு கொள்கை (Acceptance of Necessity) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெடித்தது கடல் போர்! அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு; அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை
அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளிப் பிரிவு பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மாங்க்ரோல் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
இந்தியக் கடற்படையின் நீருக்கடியிலான கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், ஐஎன்எஸ் மாங்க்ரோல் எனும் அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாகப் சேர்க்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் பெரும் பரபரப்பு: 22 இந்தியர்களுடன் 2 வணிகக் கப்பல்களைக் கடத்திய கடற்கொள்ளையர்கள்
அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் 22 இந்திய மாலுமிகளுடன் இரண்டு வணிக கப்பல்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளன.
250 நாட்களாக கரையை தொடவில்லை: அமெரிக்கப் போர்க்கப்பலில் மன உளைச்சலால் மாலுமிகள் தற்கொலை முயற்சி
அமெரிக்க கடற்படையின் USS Abraham Lincoln என்ற விமான தாங்கி போர்க்கப்பலில் பணியாற்றி வரும் 5,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள், தொடர்ச்சியாக 250 நாட்களாக கரையை தொடாமல் கடலிலேயே முடங்கியுள்ளதால் அங்கு கடுமையான மனநல பாதிப்பு மற்றும் மன உளைச்சல் நிலை உருவெடுத்துள்ளது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் 10-வது நாளாக நீடிப்பு: ஈரானின் ராணுவ மையங்கள் தகர்ப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை முடக்கும் நோக்கில், தொடர்ந்து 10-வது இரவாக ஈரான் மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அறிவிப்பு
ஜூன் 17 அன்று அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் "செல்லாதது" எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
75% உள்நாட்டுத் தொழில்நுட்பம்! கடற்படையில் இணைந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்ற அதிநவீன போர்க் கப்பலை சனிக்கிழமை (ஜூலை 11) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆகாஷ் தரங் மற்றும் எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு நவீனப்படுத்துவதற்காக, 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
INS திரிகண்ட் கப்பலின் மின்னல் வேக ஆபரேஷன்! 21 மாலுமிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை
சர்வதேச கடல் பகுதியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை மீண்டும் ஒருமுறை தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.
இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு: ஏஐ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன.
மன் கி பாத் உரை: நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு துறைகளில் வரலாற்று சாதனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் தொடரின் 135 ஆவது பகுதியில் இன்று (ஜூன் 28) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இந்திய கடற்படையில் ஒரே நேரத்தில் 3 புதிய உள்நாட்டுப் போர்க்கப்பல்கள்! நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன கடற்படைக் கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 22) கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகக் கடற்படையில் இணைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இந்தியா முதல் முறையாக 12 அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியது
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கூற்றுப்படி, இந்தியா அமைதிக் காலத்தில் 12 அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளது.
ராணுவத் தளபதிகளின் பண அதிகார வரம்பு அதிரடி உயர்வு! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு!
இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்; கடற்படைக்கும் புதிய தலைவர் அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் தனது 70% ஏவுகணைகளைத் தக்கவைத்துள்ளது, பல மாதங்களுக்கு முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியும்: CIA
ஈரான், அமெரிக்க முற்றுகையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று மத்திய புலனாய்வு முகமை (CIA) மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படையின் அதிரடி மாற்றம்: ஐஎன்எஸ் கண்டேரி நீர்மூழ்கிக் கப்பலில் AIP சிஸ்டம் பொருத்தம்; சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியக் கடற்படையின் நவீன நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் கண்டேரி (INS Khanderi), ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.
உலகிலேயே பலமான ராணுவம், ஆனால் பசியில் வாடும் வீரர்கள்: ஈரான் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களின் அவல நிலை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை (Blockade) வலுப்படுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள், கப்பல்களில் போதிய உணவின்றிப் பசியால் வாடி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎன்எஸ் அரிதமன்: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயார்
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மூன்றாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' (INS Aridhaman) விரைவில் இந்திய கடற்படையில் இணையவுள்ளது.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் மூடலுக்கு காரணமான ஈரான் கடற்படைத் தலைவர் அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
பெண் அதிகாரிகளுக்கு நீதி: ராணுவத்தில் நிலவிய பாகுபாட்டைத் தகர்த்த உச்ச நீதிமன்றம்
இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் பணியாற்றும் பெண் குறுகிய கால சேவை (SSC) அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் (Permanent Commission) வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
போருக்கு நடுவே இந்தியாவிற்கு உதவிய ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்த எல்பிஜி கப்பல்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் அபாயகரமான கடல் பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை, இந்திய எல்பிஜி கப்பல் ஒன்று ஈரான் கடற்படையின் நேரடி வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாகக் கடந்துள்ளது.
"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ராணுவத் திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்று ஈரானின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தனது இலக்குகளை எட்டும் வரை பின்வாங்காது என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலும் இந்தியாவின் உதவியும்! IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம்
இந்தியக் கடற்படையின் தளவாடத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150 (Air-Droppable Container) கன்டெய்னரின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன.
எல்லாவற்றையும் விட மனிதநேயமே முக்கியம்! ஈரான் போர்க்கப்பலுக்கு கொச்சியில் அனுமதி கொடுத்ததன் காரணம் இதுதான்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக இந்தியா அனுமதி அளித்தது.
கொச்சியில் தஞ்சம் புகுந்த மற்றொரு ஈரான் போர்க்கப்பல்; 183 வீரர்களுக்கு இந்தியா புகலிடம்
இலங்கை அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடுக்கடலில் நடந்த தாக்குதல்! அமெரிக்க டார்பிடோவால் மூழ்கிய ஈரான் கப்பல்; ஆபத்தில் உதவிய இந்திய கடற்படை
இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில், ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டெனா அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளானது.
இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: விரிவான அறிக்கை
நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.
பச்சை பொய்! ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுகிறதா? வெளியுறவுத்துறை விளக்கம்
அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 101 பேர் மாயம், 32 பேர் மீட்பு
இலங்கை கடற்பரப்புக்கு மிக அருகாமையில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.
கடலுக்கு அடியில் இனி ஒளிந்து கொள்ள முடியாது! இந்திய கடற்படையின் டால்பின் ஹண்டர் ஐஎன்எஸ் அஞ்சாதிப் தயார்
இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐஎன்எஸ் அஞ்சாதிப் போர்க்கப்பல் இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னைத் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பணியில் இணைக்கப்பட்டது.
ஈரானை தாக்குவது இருக்கட்டும், முதலில் எங்கள் அவலத்தை கேளுங்கள்: அமெரிக்க போர்க்கப்பலின் மாலுமிகள் அவதி
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R Ford-இன் நீட்டிக்கப்பட்ட நிலைநிறுத்தம், அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதிக்கிறது.
நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி
அகமதாபாத்தைச் சேர்ந்த 83 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் நூதன சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 42.50 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS அரிதாமன்; இந்தியா கடற்படைக்கு மேலும் வலு
இந்தியா தனது மூன்றாவது உள்நாட்டு அரிஹந்த்-வகுப்பு அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதாமனை(SSBN) இயக்குவதன் மூலம் கடல் சார்ந்த அணுசக்தி தடுப்பை வலுப்படுத்த உள்ளது.
ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்
இந்தியக் கடற்படையின் புதுமையான 'தையல் கப்பல்' (Stitched Ship) என்று அழைக்கப்படும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்குத் தொடங்குகிறது.
கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?
கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.
உள்நாட்டிலேயே உருவான முதல் இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் டிசம்பர் 16இல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான (Diving Support Craft) 'DSC A20' வரும் டிசம்பர் 16 அன்று கொச்சியில் முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இந்திய கடற்படை நாள் 2025: இந்திய கடற்படையின் தந்தை யார்? கொண்டாடும் காரணம்
இந்தியக் கடற்படையின் வீரம், சாதனைகள் மற்றும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை நாள் (Indian Navy Day) கொண்டாடப்படுகிறது.
இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை
இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்குடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe என்ற போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?
சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்காக புதிய தலைமுறை MP-AUVsஐ உருவாக்கியது டிஆர்டிஓ; கண்ணிவெடிகள் போன்ற பொருட்களைக் கண்டறிய உதவும்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய தலைமுறை கையடக்கத் தானியங்கி நீருக்கடியில் இயங்கும் வாகனங்களை (Man-Portable Autonomous Underwater Vehicles - MP-AUVs) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
'80% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட'INS Ikshak' கப்பலின் சிறப்பு என்ன?
இந்திய கடற்படை அதன் மூன்றாவது சர்வே வெசல் (SVL) வகை கப்பலான INS இக்ஷக்கை நவம்பர் 6, 2025 அன்று கொச்சியில் பணியமர்த்தியது.
'பூர்வி பிரசாந்த் பிரஹார்': சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி
இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் "பூர்வி பிரசாந்த் பிரஹார்" என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக தயாராகி வருகின்றன.
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் Khabarovsk அறிமுகம்
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.
NOTAM வெளியீடு; இந்தியாவின் மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா
இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஒரு பெரிய அளவிலான முப்படை ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படையினருடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி; ஆயுத படைகளுக்குப் புகழாரம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதப் படைகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் தனது ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று கோவா மற்றும் கார்வார் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலில் இந்தியக் கடற்படை வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார்.
இந்தியாவின் முதல் மின்சார போர்க்கப்பலில் பணியாற்ற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்வம்
நாட்டின் முதல் மின்சார போர்க்கப்பலில் இந்திய கடற்படையுடன் இணைந்து பணியாற்ற ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
பாயின்ட் நீமோவைக் கடந்து இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் சாதனை: மனதின் குரலில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) ஒலிபரப்பான தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில் (Mann Ki Baat), இந்தியக் கடற்படையின் இரண்டு அதிகாரிகளின் துணிச்சலான சாதனையை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆண்ட்ரோத் இணைப்பு
இந்தியக் கடற்படை தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆண்ட்ரோத்தை இணைத்துள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கி மூழ்கடித்தது ரஷ்யா
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் கடற்படையின் உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை இறக்கும் இந்திய கடற்படை
இந்திய கடற்படை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவற்றை இயக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்மூழ்கி உதவிக் கப்பல் ஐஎன்எஸ் நிஸ்டர் கடற்படையில் சேர்ப்பு
இந்திய கடற்படை ஜூலை 18, 2025 அன்று விசாகப்பட்டினத்தில் அதன் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி உதவி கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டரை அறிமுகப்படுத்தியது.
எப்-35பி இல் தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க முடியாமல் தவிப்பு; பிரித்தெடுத்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம்
ஜூன் 14 அன்று அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன எப்-35பி ஸ்டெல்த் ஜெட், கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிக்கித் தவிக்கிறது.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிப்படையாக விவரித்த கடற்படை அதிகாரி
பாகிஸ்தான் இராணுவ தளங்களைத் தாக்குவதற்கு இந்திய அரசாங்கம் விதித்த ஆரம்ப கட்டுப்பாடுகள் மற்றும் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே தாக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் காரணமாக இந்தியா சில போர் விமானங்களை இழந்தது என இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடற்படை தலைமைத் தளபதி மற்றும் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கிய நபர் உள்ளிட்ட பலரை நீக்கியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது
டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புத் தலைவர்(CDS) இப்போது 3 படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) மற்றும் இராணுவ விவகாரத் துறையின் செயலாளர் (DMA) ஆகியோருக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து
சனிக்கிழமை மாலையில், மெக்சிகன் கடற்படை பயிற்சிக் கப்பலான குவாடெமோக் (Cuauhtémoc), நியூயார்க் நகரத்தின் பிரபல சின்னமான புரூக்ளின் பாலத்தில் மோதியது.
ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, இந்திய கடற்படை கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கும் முழுத் திறனுடனும், தயார் நிலையில் இருந்ததாகவும் இருந்ததாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.
இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்
பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ராணுவம் மற்றும் விமானப்படைக்கான ALH துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் இயக்க மத்திய அரசு அனுமதி
இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் விமானப்படை வகைகளின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) துருவ்வின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (மே 1) உறுதிப்படுத்தினர்.
அரபிக் கடலில் தொடர் ஏவுகணை சோதனை; வீடியோ வெளியிட்டு வல்லமையைக் காட்டிய இந்திய கடற்படை
வலிமை மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி சோதித்துள்ளன.
ஒடிசாவில் அக்னிவீர் ஆட்சேர்ப்பில் மோசடி; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கிய கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது
2024 நவம்பரில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாமின் போது அக்னிவீர் தேர்வர்களிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்கள் உட்பட மூன்று நபர்களை ஒடிசா காவல்துறை கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை
இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை (எம்ஆர்-எஸ்ஏஎம்) அமைப்பின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை
இந்தியாவும் பிரான்சும் ஏப்ரல் 28 அன்று இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-கடற்படை போர் விமானங்களை வாங்குவது உட்பட மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.
இந்திய எதிர்ப்பை அடுத்து திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சியை ரத்து செய்தது இலங்கை
இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.63,000 கோடிக்கு பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் கடற்படை ஜெட் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சுடன் ஒரு பெரிய அரசாங்க ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.