
பாகிஸ்தான் கடற்படைக்கு செக்; அரபிக் கடலில் எம்ஆர் சாம் ஏவுகணையை வீசி இந்திய கடற்படை சோதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை (எம்ஆர்-எஸ்ஏஎம்) அமைப்பின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
கடலில் இருந்து தாக்கும் பொருளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதல், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
குறிப்பாக அதே பிராந்தியத்தில் பாகிஸ்தான் கடற்படை ஏவுகணை சோதனையை திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக, இந்திய கடற்படை செய்தனை செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக மாறியுள்ளது.
இந்திய கடற்படை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சாதனையை பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்புக்கு சான்றாக வலியுறுத்தியது.
ஐஎன்எஸ் சூரத்
ஐஎன்எஸ் சூரத் சிறப்பம்சங்கள்
ஐஎன்எஸ் சூரத் திட்டம் 15பி கைடெடு ஏவுகணை அழிப்பு கப்பல் திட்டத்தின் கீழ் நான்காவது மற்றும் இறுதி கப்பலாகும், மேலும் இது 75% உள்நாட்டு பாகங்களைக் கொண்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் உலகின் மிகவும் மேம்பட்ட அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும், அதிநவீன ஆயுதங்கள், சென்சார் சூட்கள் மற்றும் நெட்வொர்க் மையப்படுத்தப்பட்ட போர் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
எம்ஆர்-சாம் அமைப்பு, தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கடற்படையின் வான் பாதுகாப்பு திறன்களை கணிசமாக வலுப்படுத்துகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.